பக்கம்:மருதநில மங்கை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை169


மற்றது, அறிவல்யான் நின்சூள், அனைத்தாக, நல்லார்
செறிதொடி உற்ற வடுவும், குறிபொய்த்தார் 10
கூர்உகிர் சாடிய மார்பும், குழைந்தநின்
தாரும், ததர்பட்ட சாந்தமும் சேரி
அரிமதர் உண்கண்ணார், ஆராக் கவவின்
பரிசழிந்து யாழநின் மேனிகண்டு, யானும்
செரு ஒழிந்தேன்; சென்றி இனி 15
தெரியிழாய்! தேற்றாய்; சிவந்தனை, காண்பாய்நீ; தீதின்மை
ஆற்றின் நிறுப்பல் பணிந்து.
அன்னதேல், ஆற்றல்காண்!
வேறுபட்டாங்கே கலுழ்தி, அகப்படின்,
மாறுபட்டு ஆங்கே மயங்குதி; யாதொன்றும் 20
கூறி உணர்த்தலும் வேண்டாது, மற்றுநீ
மாணாசெயினும் மறுத்து ஆங்கே, நின்வயின்
காணின் நெகிழும் என்நெஞ்சாயின், என்உற்றாய்
பேணாய்நீ பெட்பச் செயல்.”

தலைவன் பரத்தையர் ஒழுக்கம் கண்டு ஊடிய தலைவி, அவன் ஆற்றாமை கண்டு ஊடல் தீர்ந்தது.

1. அரி–அழகிய; 2. நெகிழ்–மலர்ந்த; 3. கண்ணி –தலை மாலை; தார்–மார்புமாலை; நயந்தார்–விரும்பிய பரத்தையர்; 4. நெருகையின்–நேற்றைக் காட்டிலும்; 5. என்னை–என் தலைவன். 7. கதியாதி–கோபிக்காதே; 8. தெய்வத்தால் தெளிக்கு கண்டீ என மாற்றுக; தெளிக்கு–தெளிவிப்பேன்; கண்டீ–காண். 12. ததர்பட்ட–கலைந்த; 13. ஆரா–மனநிறைவு தாராத; கவவு–புணர்ச்சி. 14. பரிசு–பெருமை; 15. செரு–ஊடல்; 17. ஆற்றின்–முறைப்படி; நிறுப்பல்–நிலைநாட்டுவேன்; 18. அன்னதேல்–அவன் கருத்து அதுவானால், ஆற்றல் காண்–நெஞ்சே! அவன் ஆற்றலைப் பாராய். 19. வேறுபட்டாங்கே–புலந்து வேறுபட்ட அப்போழுதே; கலுழ்தி–வருந்துகிறாய்: 22. மாணா–மாண்பற்ற செயல்கள். 24. பெட்ட–நான் விரும்பும் செயல்களை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/171&oldid=1130132" இலிருந்து மீள்விக்கப்பட்டது