பக்கம்:மருதநில மங்கை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27


வேட்டது கண்டாய்

நான்மாடக் கூடல் எனும் பெயர் வாய்ந்த மதுரை மாநகரில் வாழ்ந்த ஓர் இளைஞன் ஒருநாள், சில பரத்தையரோடு, வையையாற்றைக் கடந்து திருப்பரங்குன்றத்திற்குச் சென்று, ஆங்கு அவரோடு ஆடிப்பாடி அகமகிழ்ந்திருந்தான். சில நாள் கழித்து வீட்டிற்கு வந்தான்். கணவன் செயல் கண்டு சினந்திருந்த மனைவி, வந்தவனை வரவேற்றிலள். அவனோடு வாய் திறந்து பேசவுமில்லை. அதனால், அவன் பெரிதும் வருந்தினான். அவள் ஊடலைப் போக்கிக் கூட்டுவிப்பார் எவரும் இல்லை. யாரேனும் வருவர் எனச் சிறிது நாழிகை காத்திருந்தான். எவரும் வந்திலர். மேலும் காத்திருக்க அவனால் இயலவில்லை. அதனால், அவள் ஊடலைத் தானே தணிக்கத் துணிந்தான். அவள் அண்மையில் சென்றான். “மனத்தில் வளரும் பூங்கொடி போன்றவளே!” என அவளைப் பாராட்டினான். பின்னர்ப், “பெண்ணே! நான் ஒரு கனவு கண்டேன். என்னை மறந்து உறங்கிய அவ்வாழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/172&oldid=1130133" இலிருந்து மீள்விக்கப்பட்டது