பக்கம்:மருதநில மங்கை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176புலவர் கா. கோவிந்தன்


யால், வண்டுகள் உள்ள இடம் அறியாது, வெற்றிடத்தே வீசிவீசிக் கைகள் சோரக் கலங்கி நின்றாள்.

“ஒரு பூஞ்சோலையில், காற்றுப் புகுந்து அடிக்க, மலர்க் கொடிகள் அக்காற்றால் அலைப்புண்டு, ஒன்றன் மீது ஒன்று வீழ்ந்தும், ஒன்றோடொன்று பிணைந்தும் பாழாகும் காட்சி போல், அம்மகளிர், வண்டுகள் வருத்த வருந்தி, உணர்விழந்து ஓடி, ஒருவர்மீது ஒருவர் வீழ்ந்து வருந்தினர். பெண்ணே! நான் கனவில் கண்ட காட்சி இதுவே!” என்றான்.

கணவன் கூறுவது கனவுக் காட்சியன்று, நினைவில் அவன் நிகழ்த்திய நிகழ்ச்சியே என்பதைத் தொடக்கத்திலேயே அறிந்து கொண்ட அவள், அவன் இதுகாறும் கூறியவற்றைக் கேட்டமையால், தன்கருத்தே உண்மையாம் என்பதை உறுதி செய்து கொண்டாள். அதனால், அவனைப் பார்த்து, “ஏடா! பரத்தையர் உன்னோடு ஊட, அவர் ஊடல் தீர்த்துக் கூடக் கருதிய நீ, அவர் அடியில் வீழ்ந்து வணங்கி, அவர் ஊடல் தீர்த்துக் கூடி மகிழ்ந்தாய். அதை நான் அறிந்து கொண்டேன். அதை மறைக்க இக்கனாகக் கதையைக் கட்டிவிட்டாய். உன் இழிசெயல் கண்டு நான் சினவாது இருத்தல் வேண்டும் எனும் கருத்தால், நீயே கற்பித்துக் கூறிய கதைதானே இக்கனவு ? உண்மையைக் கூறு!” எனக் கூறி உறுத்து நோக்கினாள்.

மனைவியின் சினம் கண்டு, இளைஞன் மனம் நடுங்கினான். அவள் அருகிற் சென்று அடிபணிந்து, “பெண்னே! நான் கனவு கண்டது உண்மை. நான் கூறிய அனைத்தும் நான் கண்ட கனவுக் காட்சிகளே. நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/178&oldid=1130141" இலிருந்து மீள்விக்கப்பட்டது