பக்கம்:மருதநில மங்கை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை177


பொய் சொல்லி அறியேன். என்னை நம்பு. மேலும், நான் பிழையே புரிந்திருப்பினும், அது குறித்து என்னோடு ஊடுதற்கு இது ஏற்ற காலம் அன்று. பெண்ணே அதோ பார் அக் குயிலை. தன் பெடையை ஓயாது அழைக்கும் அதன் அன்பை என்னென்பேன்! அக்குயிலின் குரல் கூறும் பொருள் யாது தெரியுமா? மக்களைப் பார்த்து, ஏ, மக்காள்! மனம் மகிழப் புணர்ந்து கிடப்பீரேல், அப் புணர்ச்சியைக் கைவிடாதீர்கள்; பிரிந்து வாழ்விரேல், உடனே புணர்ச்சி மேற்கொள்ளுங்கள். இன்பம் நுகர்தற்கேற்ற இளவேனிற் பருவம் வந்துவிட்டது. ஆகவே இன்ப நுகர்விற்கு ஏற்பன மேற்கொள்ளுங்கள்! என்பதைக் கூறுவது போலன்றோ அவை கூவுகின்றன. அம்மட்டோ! அதோ பார், குயிலின் குரல் கேட்ட மதுரை மாமக்கள், மகளிரும், அவர் கணவரும், இளவேனிற்கால இன்பத்தை, ஆற்றை அடுத்த அழகிய சோலைகளில் இருந்து நுகரத், தம்மை ஆடை அணிகளால் அழகு செய்து கொள்ளும் காட்சியைக் காண். என் கனவு நனவாகும் காலம் வந்து விட்டது. அது உண்மையாகும் வண்ணம், ஊடல் தவிர்த்துக் கூடும் கருத்தை, உன் உள்ளத்தில் கொள்வாயாக!” எனக் கூறி வேண்டிக் கொண்டான்.

“புனவளர் பூங்கொடி அன்னாய்! கழியக்
கனவெனப் பட்டதோர் காரிகை நீர்த்தே;
முயங்கிய நல்லார் முலையிடை மூழ்கி
மயங்கி மற்று ஆண்டுச் சேறலும், செல்லாது

உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும், 5
அரிதின் அறம்செய்யா ஆன்றோர் உலகும்,
உரிதின் ஒருதலை பெய்தலும், வீழ்வார்ப்

மருதம்-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/179&oldid=1130142" இலிருந்து மீள்விக்கப்பட்டது