பக்கம்:மருதநில மங்கை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178புலவர் கா. கோவிந்தன்


பிரிதலும், ஆங்கே புணர்தலும், தம்மின்
தருதல் தகையாதால் மற்று.

நனவினாற் போலும், நறுநுதால்! அல்கல் 10
கனவினாற் சென்றேன், கலிகெழு கூடல்
வரைஉறழ் நீள்மதில் வாய்சூழ்ந்த வையைக்
கரைஅணி காவின் அகத்து,
உரைஇனி, தண்டாத் தீம்சாயல் நெடுந்தகாய் ! அவ்வழிக்
கண்டது எவன் மற்று நீ? 15

கண்டது, உடன்அமர் ஆயமொடு, அவ்விசும்பாயும்
மடநடை மாயினம், அந்தி அமையத்து
இடன்விட்டியங்கா இமையத்து ஒருபால்,
இறைகொண்டிருந்தன்ன நல்லாரைக் கண்டேன்,
துறைகொண்டு உயர்மணல்மேல் ஒன்றி நிறைவதை, 20
ஓர்த்தது இசைக்கும் பறைபோல் நின்நெஞ்சத்து வேட்டதே கண்டாய் கனா, கேட்டை விரையல்நீ; மற்றுவெகுள்வாய், உரை யாண்டு இதுவாகும், இன்னகை நல்லாய்! பொதுவாகத்

தாங்கொடியன்ன தகையார் எழுந்ததோர் 25
பூங்கொடி வாங்கி, இணர்கொய்ய, ஆங்கே,
சினையலர் வேம்பின் பொருப்பன் பொருத
முனையரண்போல உடைந்தன்று, அக்காவின்
துணைவரி வண்டின் இனம்.

மற்றாங்கே, நேரிணர் மூசியவண்டெல்லாம், அவ்வழிக் 30
காரிகைநல்லார் நலங்கவர்ந்து உண்பபோல் ஒராங்குமூச;

அவருள்,
ஒருத்தி செயல்அமை கோதை, நகை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/180&oldid=1130143" இலிருந்து மீள்விக்கப்பட்டது