பக்கம்:மருதநில மங்கை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
29


நகாமை வேண்டுவல்

ரண்மனை ஒன்றில் ஒரு கூனியும் ஒரு குறளனும் குற்றேவல் புரிந்து வந்தனர். அக் கூனிக்குக் குறளன் மீது காதல். குறளனுக்குக் கூனிமீது காதல். ஆனால் கூனி தன் மீது காதல் கொள்வதைக் குறளன் அறியான். குறளன் தன்மீது காதல் கொள்வதைக் கூனி அறியாள். அவர்கள் காதல், அவர்கள் மனத்திற்குள்ளேயே மறைந்து கிடந்தது.

ஒருநாள் குறளன், அரண்மனையின் ஒதுக்கிடத்தே தனித்து இருந்தான். அவ்வழியே, ஏதோ பணிமேற்கொண்டு வந்தாள்போல் வந்து சேர்ந்தாள் கூனி. கூனியைப் பார்த்து விட்டான் குறளன். நெடுநாட்களாக எதிர்நோக்கியிருந்த நன்னாள் வந்து வாய்த்ததாக எண்ணி மகிழ்ந்தான். கூனியை அணுகி, “நீரில் தெரியும் நிழல் போன்ற தெளிந்த சாயலும், கூனிக் குறுகி வேறுபட்ட வடிவம் கொண்டு செல்லும் ஏ, கூனி! உன்னோடு சிறிது பேச வேண்டும். சற்றே நில், உன்னோடு நான் பேச, நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/192&oldid=1130157" இலிருந்து மீள்விக்கப்பட்டது