பக்கம்:மருதநில மங்கை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196புலவர் கா. கோவிந்தன்


"என் நோற்றனை கொல்லோ?
நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல்;
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றித்தை.

அன்னையோ! காண்தகை இல்லாக், குறள்நாழிப் போழ்தினான் 5

ஆண்டலைக்கு ஈன்ற பறழ்மகனே! நீ எம்மை
வேண்டுவல் என்று விலக்கினை; நின்போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று.

மாண்ட, எறித்த படைபோல் முடங்கி, மடங்கி
நெறித்துவிட்டன்ன நிறை ஏரால், என்னைப் 10
பொறுக்கல்லா நோய்செய்தாய் போறிஇ, நிறுக்கல்லேன்;
நீ நல்கின் உண்டு என்உயிர்.

குறிப்புக்காண்; வல்லுப் பல்கை எடுத்து நிறுத்தன்ன
கல்லாக்குறள! கடும்பகல்வந்து, எம்மை
இல்லத்துவா என மெய்கொளீஇ எல்லா! நின் 15
பெண்டிர் உளர்மன்னோ? கூறு.

நால்லாய்கேள்! உக்கத்து மேலும் நடு உயர்ந்து, வாள்வாய
கொக்கு உரித்தன்ன கொடுமடாய் ! நின்னையான்
புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும், புறம்புல்லின்,
அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன், அருளிமோ! 20
பக்கத்துப் புல்லச் சிறிது.

போ; சீத்தை, மக்கள் முரியே! நீ மாறு: இனித்தொக்க,
மரக்கோட்டம் சேர்ந்தெழுந்த பூங்கொடிபோல
நிரப்பமில் யாக்கை தழிஇயினர் எம்மைப்
புரப்பேம் என்பாரும் பலரால்; பரத்தை, என் 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/198&oldid=1130172" இலிருந்து மீள்விக்கப்பட்டது