பக்கம்:மருதநில மங்கை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை197


பக்கத்துப் புல்லீயாய் என்னுமால்; தொக்க உழுத்தினும் துவ்வாக் குறுவட்டா! நின்னின் இழிந்ததோ கூனின் பிறப்பு? கழிந்தாங்கே, யாம் வீழ்தும் என்று தன்பின்செலவு முற்றீயாக் கூனிகுழையும் குழைவு காண்; 30

யாமை எடுத்து நிறுத்தற்றால்; தோள் இரண்டும் வீசி, யாம்வேண்டேம் என்று விலக்கவும், எம்வீழும் காமர் நடக்கும் நடைகாண்; கவர்கணைச் சாமனார் தம்முன் செலவு காண்க.

ஓஒகாண்; நம்முள் நகுதல் தொடீஇயர் நம்முள்நாம் 35 உசாவுவம்; கோன் அடி தொட்டேன்.

ஆங்காக, சாயல் இன்மார்ப! அடங்கினேன்; ‘ஏஎ பேயும் பேயும் துள்ளல் உறும்’ எனக் கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல்!

தண்டாத் தகடுருவ! வேறாகக் காவின்கீழ்ப் போதர் அகடு ஆரப் புல்லி முயங்குவேம்; துகள்தபு காட்சி அவையத்தார் ஓலை முகடு காப்பு யாத்து விட்டாங்கு.”

குற்றேவல் புரியும் கூனும் குறளும் ஊடிப் பின்னர்க் கூடியது.

1. நோற்றனை–தவம் செய்தனை; 2. நுடங்கிய – நெளிந்த; 4. உசாவுவேன்–வினாவுவேன்; நின்றீத்தை–நிற்பாயாக; 5. காண் தகை–காணத்தக்க அழகு; குறள் நாழிப்போழ்து–குறளாய்ப் பிறப்பதற்குரிய வாய்ப்பமைந்த காலம்; 6. பறழ்–இளமையைக் குறிக்கும் பெயர்; 9. மாண்ட–மாட்சிமைப்பட்ட; எறித்தபடை–கலப் பையில் கோக்கும் கொழு; 10, நெறித்து விட்டன்ன–முறித்துவிட்டாற் போன்ற; நிறை ஏரால் நிறைந்த அழகால் (இகழ்ச்சிக் குறிப்பு) 11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/199&oldid=1130173" இலிருந்து மீள்விக்கப்பட்டது