பக்கம்:மருதநில மங்கை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198புலவர் கா. கோவிந்தன்


பொறீஇ–தாங்கிக் கொண்டு; நிறுக்கல்லேன்–வாழமாட்டேன்; 13. வல்லுப்பலகை–சூதாடும் பலகை; 15, மெய்கொளீஇ–என் கைகளைப் பற்றி; 17. உக்கம்–தலை; இடையுமாம்; வாள்வாய–வாள் போலும் வாயை உடைய; 18. கொடுமடாய்–வளைந்த கூனியே; 19. அகலம்–மார்பு; 20, அக்குளுத்து– கிச்சுக்கிச்சுற்று; 22. சீத்தை –சீ கெட்டவனே; முரி–பாதி அதாவதுகுள்ளன்; 24. நிரப்பமில்யாக்கை–முழுதும் வளராத உடல்; அதாவது கூன்; 25. பரத்தை –கீழ்மைக் குணங்கள் உடையவள்; 26. புல்லீயால்–தழுவுவாயாக; என்னு மால்–என்று கூறும்; 27. துவ்வா –வளராத; நிரம்பாத; அதாவது, உளுந்தின் அளவினும், உருவால் சிறியவன் என்பது; 29. வீழ்தும் – விரும்புகின்றேம்; முற்றீயா–இசையாத; 30. குழைவு–நெளிவு அசைவு; 33. கவர்கணை–காதலர் உள்ளங்களைக் கவரும் மலர்க் கணை; 34. சாமனார்–காமன் தம்பி; தம்முன்–அவன் முன் பிறந்தோன் (காமன்); 35. தொடீஇயர் நகுதல் என மாற்றித், தொட்டு மகிழ்தற்கு எனப் பொருள் கொள்க; 36. உசாவுவம்–ஆராய்வோம்; கோன்–அரசன்; அடிதொட்டேன்–அடி தொட்டு ஆணையிட்டேன்; 38. துள்ளல்–துள்ளிக் கூத்தாடல்; உறும்– ஒக்கும்; 39. கோயில்–அரண்மனை; 40. தகடு–பொன், தகடு; 42. துகள்தபு–குற்றமற்ற; காட்சி–அறிவு; 43. முகடு–தலை; காப்பு யாத்து–கட்டு அரக்கிலச் சினையிட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/200&oldid=1130174" இலிருந்து மீள்விக்கப்பட்டது