பக்கம்:மருதநில மங்கை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30


யாம் யாரே?

ணந்து மனையறம் மேற்கொண்டு, மனம் நிறைந்த வாழ்வு வாழும் ஓர் இளைஞன், மனைவி தரும் இன்பத்தைப் பெருக நுகர்ந்தமையால், அவ்வின்பத்தில் வெறுப்புற்றுச் சிறிது காலம், பரத்தையர் தொடர்பு கொண்டு திரிந்தான். அவன் அவ்வாறு வாழ்க்கையில் தவற, அவனுக்கு வழிகாட்ட வந்து சேர்ந்தான் பாணன். இளைஞன் அளிக்கும் புதுப்புதுப் பொருள்களைப் பெற்றுப் புகழ்ந்து பாடி, அவனை இமைப் பொழுதும் பிரியாது வாழும் பாணன் இளைஞன் பரத்தையர் ஒழுக்கத்திற்கு உற்ற துணையாய் அமைந்தான். அவன் துணையால், நாள்தோறும் புதுப்புதுப் பரத்தையரைப் பெற்றுப் பேரின்பம் நுகர்ந்தான். நாள் சில கழிந்தன. மனைவியோடு கூடி நடாத்தும் மனையற மாண்பினை நினைந்து, மீண்டு, தன் மனை புகுந்தான்.

கணவன் ஒழுக்கக் கேட்டை உணர்ந்து, அவனை வெறுத்து, வருந்திக் கிடந்த மனைவி, வாழ்க்கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/201&oldid=1130179" இலிருந்து மீள்விக்கப்பட்டது