பக்கம்:மருதநில மங்கை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200புலவர் கா. கோவிந்தன்


வழுக்கி வீழ்ந்த அவனை வரவேற்க விரும்பவில்லை. மேலும், “இத்தனைநாள் என்னை மறந்து திரிந்தவனுக்கு, இன்று, என்மீது அன்பு சுரந்திருக்கும் என்பதற்கு என்ன உறுதி? தான் விரும்பும் பரத்தையின் வீடு நோக்கிக் செல்வான், என் வீடு வழியில் இருந்தமையால், ஈங்கு வந்துளான்!” என இவ்வாறு எண்ணிற்று அவள் உள்ளம். அதனால், அவனைத் தான் காண்பதையும், அவன் தன்னை அணுகுவதையும் வெறுத்தாள். அவன் தன்னை அணுக வருவதைக் கண்டு, “ஏடா! அணுக வாராதே. அங்கேயே நில். அங்கேயே நில். உன்னைப் புணரும் மகிழ்ச்சிப் பெருக்கால், மணம் நாறும் எண்ணெய் பூசி, மலர்சூடி வாழும் மங்கையர் மனைநோக்கிச் செல்லும் நீ, வழி மயங்கி, இங்கு வந்துள்ளாய் என்பதை அறிவேன். நீ வந்தவாறே திரும்பிச் செல். உன் உள்ளம் கவர்ந்த அப்பரத்தையின் மனைநோக்கி உன் கால்கள் சிவக்கக் கடுகி நட!” என்று கூறி வெகுண்டாள்.

இளைஞன், மனைவியின் சினம் கண்டு, சிறிதே மருண்டான். பின்னர் ஒருவாறு தெளிந்து, “பெண்ணே ! ஊர்ப் புறத்தே, ஒருவன் புதியதாகப் பிடித்து வந்த காடைகளைப் போர் செய்யவிட்டு, வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தான். அதைக் கண்டு நின்றமையால் காலம் கடந்து விட்டது. அதுவல்லது, நீ கூறும் குறை எதையும் நான் அறியேன். இது உண்மை!” எனத் துணிந்து ஒரு பொய் கூறினான். .

கணவன், காடைப் போர் கண்டு வந்தேன் எனக் கூறுவது பொய்யென்பதை அவள் அறிவாளாதலின், “ஏடா! நீ காடைப்போர் கண்டுகளித்து நின்றாய் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/202&oldid=1130181" இலிருந்து மீள்விக்கப்பட்டது