பக்கம்:மருதநில மங்கை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை201


நானும் கேட்டறிந்தேன். அம்மட்டோ! நீ கண்ட காடைப் போர் எத்தகைத்து? அக் காடையின் இயல்பு யாது? அக் காடைக்குரியோன் யாவன் என்பனவும் அறிவேன். அன்ப! புதிய புதிய காடைகளைக் கைப்பற்றிக் கொணர்ந்து போரிட்டுக் காட்டுவதால் உண்டாம் வளத்தை வாயாரப் பாராட்டி, அக்காடைகள் அகப்படும் இடத்தை விட்டுப் பிரியாது காத்திருந்து, அகப்பட்ட காடைகளை அன்பாகத் தடவிக் கொடுக்கும் புலையன், இனிய இசை எழுப்ப, அவ்விசை கேட்டு மயங்கி அகப்பட்ட புதிய காடையின் போரைக் கண்டு வந்தாய் என்றும், அப்போரில் பட்ட புண் புலராது பெருந்துயர் தந்தது என்றும் பிறர் கூறக் கேட்டேன்.

“அன்ப! எப்பொழுதும் நீ அக் காடையோடு திரிவதைக் காணும் ஊரார் கூறும் பழிச்சொற்களைப் பொருட்படுத்தாது, நீ அக் காடையை மார்பிலே அனைத்துக் கிடக்க, நீ அவ்வாறு கைவிடாது கைக் கொண்டு வாழ்வதால், செருக்குற்ற அக்காடை, தனக்கு மாறுபாட்டைத் தருமாறு தன்னோடு போர் செய்யவல்ல பிறிதொரு காடையைக் கண்டவிடத்தும் அஞ்சாது அதனோடு போர்செய்யும் போரையும் கண்டு மகிழ்ந்தாய் என்றும் சிலர் வந்து கூறினர்.

“அன்ப! அக்காடை போரில் பெற்ற புண்ணிற்கு மருந்திடும் நீ, அம்மருந்து புண்ணில் நன்கு படுதற் பொருட்டு, அப் புண்ணை மூடிய மயிர்களைப் பறிக்குங்கால், நோவப் பறிக்காது, பையப் பறித்து அன்பு காட்ட, அக்காடை தன்னை எதிர்த்த காடையை, விரைந்து போரிட்டு வென்று முடிவு காணாது, அக்காடையோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/203&oldid=1130185" இலிருந்து மீள்விக்கப்பட்டது