பக்கம்:மருதநில மங்கை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212புலவர் கா. கோவிந்தன்


யாங்குச்சென்று ஈங்கு வந்தித்தாய் கேள் இனி,
ஏந்தி, எதிர்இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்! 5
குதிரை வழங்கி வருவல்.

அறிந்தேன்; குதிரைதான்,
பால் பிரியா ஐங்கூந்தல் பன்மயிர்க் கொய்சுவல்,
மேல்விரித்து யாத்த சிகழிகைச் செவ்வுளை,
நீல மணிக்கடிகை வல்லிகை, யாப்பின்கீழ் 10
ஞால் இயல் மென்காதின் புல்லிகைச் சாமரை,

மத்திகைக் கண்ணுறையாகக் கவின்பெற்ற
உத்தி ஒருகாழ், நூல் உத்தரியத் திண்பிடி,
நேர்மணி நேர்முக்காழ்ப் பல்பல கண்டிகைத்,
தார்மணி பூண்ட தமனிய மேகலை, 15

நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப, இயற்றி, நீ
காதலித்து ஊர்ந்த நின் காமக்குதிரையை
ஆய்சுதை மாடத்து, அணிநிலா முற்றத்துள்,
ஆதிக் கொளீஇய அகையினை ஆடுவை 20
வாதுவள்; வாழிய! நீ

சேகா! கதிர்விரி வைகலின் கைவாரூஉக் கொண்ட
மதுரைப் பெருமுற்றம்போல நின் மெய்க்கண்
குதிரையோ வீறியது?

கூர்உகிர் மாண்ட குளம்பின் அது நன்றே, 25
கோரமே! வாழி! குதிரை.

வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக்
குதிரை உடல் அணிபோல நின் மெய்க்கண்
குதிரையோ கவ்வியது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/214&oldid=1130231" இலிருந்து மீள்விக்கப்பட்டது