பக்கம்:மருதநில மங்கை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை213


சீத்தை பயம் இன்றி ஈங்குக் கடித்தது நன்றே; 30
வியமமே; வாழி! குதிரை.
மிகநன்று; இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை,
பெருமணம் பண்ணி அறத்தினிற்கொண்ட
பருமக் குதிரையோ அன்று; பெரும! நின்
ஏதில் பெரும்பாணன் தூது ஆட, ஆங்கேயோர் 35

வாதத்தான்வந்த வளிக்குதிரை; ஆதி
உருவழிக்கும் அக்குதிரை ஊரல்; நீ ஊரில் பரத்தை
பரியாக, வாதுவனாய் என்றும் மற்று அச்சார்த்
திரி; குதிரை ஏறிய செல்.”

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனைத், தலைவி தாழ்த்த காரணம் என். எனக், குதிரை ஊர்ந்தேன் என அவன் கூற, “நீ ஊர்ந்த குதிரை பரத்தையே!” எனப் புலந்து கூறி, அவனை அவள் நெருக்கியது இது.

1. எதிர் அல்ல – செயலுக்கு மாறுபட்டதன்று; இரண்டும் ஒரு தன்மையவே; 2. பாய்ந்தாய்ந்த தானை – நலங்கிய ஆடை; மைந்தினை–வலியினை உடைய; 3. வேரை–வேர்வை உடையை; சுவல்–தோள்; கண்ணி – தலை மாலை; 8. சுவல்–பிடரி மயிர்; 9. சிகழிகை–தலையின் முடி; உணை – தலையாட்டம் எனும் குதிரை அணி; 10. வல்லிகை–குதிரையின் கழுத்தாரம்; 11. ஞால் இயல் – தொங்கும் இயல்புடைய; புல்லிகை – மகளிர் அணியும் ஒரு காதணி; சாமரை – கன்னசாமரை எனும் குதிரை அணி; 13. உத்தி – சுட்டி எனும் மகளிர் அணி; மத்திகை–குதிரைச் சாட்டை; உத்தரியம்–மேலாடை; பிடி–கடிவாளம்; 14. முக்காழ்–முக்கண்டன் எனும் கழுத்து மாலை; கண்டிகை–குதிரையின் கழுத்து மாலை; 15. தமனியம்–பொன்; 16. நூபுரம்–சிலம்பு; புட்டில்–கெச்சை ; 19. சுசை–சுண்ணாம்பு; 20. ஆதி–ஆதி எனும் ஒருவகை வேகம்; 21. வாதுவன்–குதிரைச் சேவகன்; 22. சேகா–சேவகா என்பதன் குறை! கைவாரூஉக் கொண்ட–கையால் பெருக்கி எடுத்த; 23. முற்றம்–தெருவு; 24.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/215&oldid=1130237" இலிருந்து மீள்விக்கப்பட்டது