பக்கம்:மருதநில மங்கை.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மருதநில மங்கை61
 

மறந்து, மாண் பிலனான உன்னையும் பாராட்டிப் புகழ்கின்றனனே' உன் பாணன்! அவனும் பித்தேறியவன். நஞ்சு, உண்டார் உயிரை அழிக்கும் என்பதை அறிந்தும், அதை உண்ணும் அறிவிலி போல், உன்பால் உண்மை அன்பு இல்லை, உன் சொல்லில் உறுதி இல்லை என்பதை உணர்ந்தும், உன்னை அடையத் துடித்து நிற்கின்றார்களே, பரத்தையர் ! அவர்களும் பித்தேறியவர். ஒருவன் ஒருத்தியோடு வாழ்வதே ஒழுக்க நெறியாகவும், முற்பகல் ஒருத்தி, நண்பகல் ஒருத்தி, பிற்பகல் ஒருத்தி எனத் திரிகின்ற நீயும் பித்தேறியவன். உன் தேரைக் காணும் ஊரார், 'அதோ போகிறது பார், பரத்தையரை அகப்படுத்தும் பெரிய வலை!' எனக் கூறி நகைக்கவும் நானாது, பரத்தையரைத் தேரேற்றிக் கொணரும் தன் தொழிலை விடாது செய்கின்றனனே, உன் தேர்ப்பாகன்! அவனும் பித்தேறியவன்!” எனப் படபடக்கும் சொற்களால் அவன் ஒழுக்கக் கேட்டை எடுத்துக் காட்டி இடித்து உரைத்தாள்.

"பொய்கைப்பூப் புதிதுஉண்ட வரிவண்டு, கழிப்பூத்த
நெய்தல்தாது அமர்ந்துஆடிப், பாசடைச் சேப்பினுள் செய்துஇயற்றியதுபோல வயல்பூத்த தாமரை
மைதபு கிளர் கொட்டை மாண்மதிப் படர்தரூஉம்,
கொய்குழை அகைகாஞ்சித் துறைஅணி நல்ஊர! 5

அன்பிலன்; அறனிலன் எனப்படான் எனஏத்தி
நின்புகழ் பலபாடும் பாணனும் ஏமுற்றான்;

நஞ்சு உயிர்செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளிஇன்மை
கண்டும் நின்மொழிதேறும் பெண்டிரும் ஏமுற்றார்;