பக்கம்:மருதநில மங்கை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை65


இளமகளிர், வயலில் மலர்ந்து கிடக்கும் நெய்தலையும், ஆம்பலையும் பறிக்கும் ஆர்வத்தால், ஆரவாரம் செய்து கொண்டே, ஒருவரை ஒருவர் முந்த ஒடுவாராக, அவ்வயலை அடுத்த உப்பங்கழிகளில் ஆரல் மீனைத் தேடித் திரிந்து கொண்டிருக்கும் நாரைகள், அம்மகளிர் ஓடும் பொழுது எழும் ஆரவாரப் பேரொலி கேட்டு அஞ்சித், தம் தொழிலை மறந்து, அம்மகளிர் எளிதில் ஏறித் துயர் செய்ய மாட்டா மரங்களின் உயர்ந்த கிளைகளில் சென்று அமர்ந்து, அம் மகளிர் செய்த கொடுமையை, அம் மகளிரின் பெற்றோர்க்கு அறிவிப்பனபோல், உரத்த குரல் எடுத்து, ஓயாது கூவும்” நிகழ்ச்சியை தினைப்பூட்டிப், “பெண்ணே! நாரைகளுக்குக் கேடு செய்ய வேண்டும் எனும் மனக் கருத்து இன்றி, அம்மகளிர், அறியாது செய்த கொடுமையையும், நாரைகள் எடுத்துக் கூறுகின்றன. ஆனால் நீயோ, உன் கணவன் பல கொடுமைகளை அறிந்தே செய்யவும் வாய் மூடிக் கிடக்கின்றனையே, என்னே உன் அறியாமை!” எனக் கூறாமல் கூறிக் கண்டித்தாள்.

தோழி கூறியன கேட்டாள் அப் பெண். தன் தோழியின் அருகில் அமர்ந்தாள். “தோழி! நானும் ஒரு பெண்தான். கணவனைப் பரத்தை வீடு செல்ல விடுத்துக் கலங்காதிருக்கும் கல்மனம் உடையேளல்லள் நான். அவன் கொடுமை கண்டு நானும் கலங்குகிறேன். பரத்தையர் சேரி சென்று, ஆங்குள்ள இளமகளிர் பலரோடு தொடர்பு கொண்டு, அவர் நலத்தைக்கெடுத்து, அவர்பால் தான் பெற்ற புணர்ச்சிக் குறிகளோடு வரும் அவனைக் கண்டு, அழுது அழுது, கண்ணிர் விட்ட நாட்கள் கணக்கில, ஆயினும், தோழி! அவனை வெறுத்து

மருதம்–5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/67&oldid=1129887" இலிருந்து மீள்விக்கப்பட்டது