பக்கம்:மருதநில மங்கை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை81


நிற்றலும் இயலுமோ?” என்று கூறி, அவனை ஏற்று இன்புற்றாள்.

“இணைஇரண்டு இயைந்து ஒத்தமுகை நாப்பண், பிறிது
துணை இன்றித், தளைவிட்ட தாமரைத் தனிமலர், [யாதும்
திருமுகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு இணைபவள்
அரிமதர் மழைக்கண்நீர், அலர்முலைமேல் தெளிப்பபோல்

தகைமலர்ப் பழனத்த புள்ஒற்ற ஒசிந்துஒல்கி 5
மிகநளிை சேர்ந்த அம்முகைமிசை அம்மலர்
அகஇதழ்த் தண்பனி உறைத்தரும் ஊர! கேள்;
தண்தளிர்த்தகை பூத்த, தாது.எழில் நலம்செலக்
கொண்டுநீ மாறிய கவின்பெறல் வேண்டேன்மன்

உண்டாதல்சாலா என்உயிர் சாதல் உணர்ந்துநின் 10
பெண்டு எனப் பிறர்கூறும் பழிமாறப்பெறு கற்பின்,

பொன்எனப் பசந்தகண், போதுஎழில் நலம்செலத்;
தொன்நலம் இழந்தகண் துயில்பெறல் வேண்டேன்மன்;
நின் அணங்குற்றவர் நீ செய்யும் கொடுமைகள்
என்னுழை வந்துநொந்து உரையாமல் பெறுகற்பின்; 15

மாசற மண்ணுற்ற மணிஏசும் இருங்கூந்தல்
வீசேர்ந்து வண்டுஆர்க்கும் கவின்பெறல் வேண்டேன்மன்;
நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாணன் எம்மனை
நீசேர்ந்த இல்வினாய் வாராமல் பெறுகற்பின்,

ஆங்க, 20
கடைஇய நின்மார்பு தோயலம் என்னும்
இடையும், நிறையும் எளிதோ? நிற்காணின்,
கடவுபு, கைத்தங்கா நெஞ்சு என்னும், தம்மோடு
உடன்வாழ்பகை உடையார்க்கு.”

மருதம்–6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/83&oldid=1129892" இலிருந்து மீள்விக்கப்பட்டது