பக்கம்:மருதநில மங்கை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92புலவர் கா. கோவிந்தன்


மணிபுரை செவ்வாய் நின்மார்பகலம் நனைப்பதால்,
தோய்ந்தாரை அறிகுவேன் யான்எனக் கமழும்நின்
சாந்தினால் குறிகொண்டாள் சாய்குவள் அல்லளோ? 10

புல்லல் எம்புதல்வனைப், புகல்அகல் நின்மார்பின்,
பல்காழ்முத்து அணிஆரம் பற்றினன் பரிவானால்,
மாண்இழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பின்
பூணினால் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ?

கண்டேனம் புதல்வனைக் கொள்ளாதி, நின்சென்னி 15
வண்டுஇமிர் வகைஇணர் வாங்கினன் பரிவானால்;
நண்ணியார்க் காட்டுவது இதுஎனக், கமழும்நின்
கண்ணியால் குறிகொண்டாள் காய்குவள் அல்லளோ?

என வாங்கு,
பூங்கண் புதல்வனைப் பொய்பல பாராட்டி 20
நீங்காய் இகவாய், நெடுங்கடை நில்லாதி,
ஆங்கே அவர்வயின் சென்றி, அணிசிதைப்பான்
ஈங்குஎம் புதல்வனைத் தந்து.”

பரத்தையிற் பிரிந்து வந்து புதல்வன் வாயிலாகப் புகுந்த தலைவனுக்கு வாயில் மறுக்கும் தலைவி கூறியது இது.

1. இமிழ்–ஆரவாரிக்கும்; ஒலி–முற்றி ஒலிக்கும், 2. அரை–தண்டு, 3. வயங்கிய–விளங்கிய 5. வயந்தகம்–நெற்றியில் அணியும் ஒருவகை அணி 8. மணிபுரை–பவளமணி போன்ற; 9. தோய்ந்தார்–புணர்ந்த மகளிர்; 10. சாய்குவள்–வருந்துவள்; 11. புல்லல்– அணைத்துக் கொள்ளாதே; புகல்–பரத்தையர் புகழும்; 12. பல்காழ்–பலவிடம், பற்றினன் பரிவானால்–பற்றி அறுப்பான், 16. வாங்கினன்–பற்றி, 17. நண்ணியார்–புணர்ந்த மகளிர்; 20. பூங்கண்–அழகிய கண்: 21. இகவாய்–கடவாய், நெடுங்கடை–பெரிய வாயில்; 22. சென்றி–செல்வாயாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/94&oldid=1129865" இலிருந்து மீள்விக்கப்பட்டது