பக்கம்:மருதநில மங்கை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15


வருக எம் பாக மகன்

வழத்தால் பண்ணி, விளிம்பில் முத்தை அரும்பாக அழுத்தி ஆக்கிய வட்டப் பலகை மீது, செதுக்கி வைத்த சின்னஞ்சிறு மர யானையை வைத்து ஆடிக் கொண்டிருந்தான் மகன். அவன் ஆட்டத்தையும், பஞ்சுபோல் மெத்தென்ற தலையில் மூன்று மணிவடங்கள் விளங்கும் அழகிய கோலத்தையும் கண்டு களித்திருந்தாள் அவன் தாய். அவள் கணவன், அவளையும் அழகிய மகனையும் மறந்து, ஒரு பரத்தைபால் காதல் கொண்டு, அவள் வீட்டில் வாழ்ந்திருந்தான். கணவன் பிரிவால் கலங்கினாள் அவள். “மகனை ஈன்று தாயாம் நிலைபெற்ற என்பால் அவர் அன்பு குறைந்தமை கண்டு நான் வருந்தேன். ஆனால், பகைவரும் விரும்பும் பேரழகு வாய்ந்த தன் மகன்மீது கொண்ட அன்பையும் மறந்து விட்டாரே!” என எண்ணி வருந்தி வாழ்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/95&oldid=1129657" இலிருந்து மீள்விக்கப்பட்டது