பக்கம்:மருதநில மங்கை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94புலவர் கா. கோவிந்தன்


ஒரு நாள், மகன் யானையை வைத்து ஆடிக் கொண்டிருந்தான். மணி மணியாக முறுக்கிய மெல்லிய கயிற்றால் கட்டி, காலில் அணிந்த கெச்சை கலீர் கலீர் என ஒலிக்க, மெல்ல மெல்ல ஈர்த்து மகிழ்ந்திருந்தான். அவன் ஆடலைக் காணும் இன்பத்தில் காதலன் பிரிவால் நேர்ந்த கடுந் துயரையும் மறந்திருந்தாள் அவள். அந்நிலையில், ஆங்கு வந்து நின்றான் அவள் கணவன். கணவன் வருகையை அவள் அறிந்தாள். ஆனால், அவள் அவன்பால்கொண்ட வெறுப்புள்ளம், அவனை வரவேற்க மறுத்தது. வரவேற்க மறுத்ததோடு, அவன் பிரிவால் தான் உற்ற துயரையும், அத்துயர் போக்க, அவள் மேற்கொண்ட வழியையும் விளங்கக் கூறி, அவனுக்கு வாயில் அடைக்க விரும்பினாள். அதனால், அவன் வருகையை அறிந்தும் அறியாதவள்போல், மகனை நோக்கி, “மகனே! உன் உருவ அழகைக் கண்டு, உன் ஆடல் அழகை அறிந்து, அன்பு காட்ட மறுத்து, உன்னை மறந்து வாழ்வார் வாழ்க! உன்பால் மாறா அன்புகொண்ட யான், என் கண்ணாரக் கண்டு மகிழுமாறு உன் யானைத் தேர் ஈர்த்து என்பால் வருக!” என அழைத்தித் தன் மடிமீது அமர்த்தி அணைத்துக் கொண்டாள்.

அனைத்தவாறே, “அன்புடை மகனே! உன் காலில் கட்டிய கிண்கிணி கலீர் கலீர் என ஆரவாரிப்பத், தத்தித் தத்தித் தளர் நடையிட்டு வரும் உன் நடை அழகைக் கண்டு, களித்துக் கவலை மறந்து மகிழ்கிறேன். ஆனால், “நாங்கள் ஈருடலும் ஓருயிருமென உள்ளம் ஒன்றி வாழ்கிறோம்!” எனக் கூறி, உன் தந்தையோடு உறவு கொண்டு மகிழ்ந்த மகளிர், பின்னர் அவன் கைவிட்டுப் போனா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/96&oldid=1129843" இலிருந்து மீள்விக்கப்பட்டது