பக்கம்:மருதாணி நகம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மருதாணி நகம்

இறுதியில் களத்துமேட்டு வாய்மடையில் கங்காணப் புள்ளி கணக்கிடுவது போல சொன்ன பெரியவரின் உறுதி படிந்த பேச்சின் முடிவை வைத்து, தன்னுடைய முடிவைப்பற்றி எண்ணமிடலாள்ை பஞ்சவர்ணம் ஆகவே, அவள் தன் கதையின் ஆரம்பத்தை எண்ணி ள்ை. வினத் தெரியாப் பருவமதில் நடந்து ஓடி ஒளிந்து கொண்ட பாசத்தின் கதை, தொடர்பு விட்டுப்போன ஏற்றக் கயிற்றின் அவிழ்ந்து பிரிந்த நார்த்தொங்கல் போல, இமை நடுவிலேயே அறுந்துவிட்டது. பிறகு, அவள் தன் பருவத்தின் வசந்த விழாக் கோலத்தை ஆராய்ந்தாள். பல இளவட்டங்களைச் சற்றே விலக்கி விட்டு, கோலப்பன் என்ற அசல் நாட்டான் தோன்ரு மல் தோன்றினன். அவளுடன், அவன் பரிசளித்த அந்தத் தங்கச் சரடும் தோன்றியது. அதே இமைப்பில், நாகுடிச் சாமியாடியும் அங்கு தோன்றினர் !

அந்நேரத்திற்கென்று,தெருநாய் வீரிட்டு அலறியது, கெட்ட காற்று பட்டதும் அலறுமே கைப்பிள்ளை, அது மாதிரியாக!

விசுக்கென்று காட்டேரியின் பாய்ச்சலுடன் துள்ளி வந்தாள் பஞ்சவர்ணம். கைவிரல்களில் ஒட்டியிருந்த மாவு கீழே சொட்டுச்சொட்டாக வழி ந்துகொண்டிருந் ததை லவலேசமும் சட்டை செய்யாமல் வாசலுக்கு வந்த போது, உள்விளக்கின் மங்கலான வெளிச்சம் ஆளைப் பிடித்துக் காட்டியது. "வாங்க சாமியாடி ஐயா !” என்று வரவேற்ருள். முடிபோடாமலே கிடந்த ரவிக்கையை பலக்க முடிச்சிட்டாள். "குந்துங்க" என்ருள்.

வந்தவர் பதிலுக்கு "ம்" என்று சொல்லிவிட்டு, "தங்கச்சியோ, கோலப்பனைக் கண்டு தாண்டிக்கிட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/104&oldid=612009" இலிருந்து மீள்விக்கப்பட்டது