பக்கம்:மருதாணி நகம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 103

போவலாம்னு ரோசிச்சு இங்கிட்டாலே நாடி வந்தேன். வந்தாக்க, ஆம்பளையைக் காணலே...” என்று பேசிக் கொண்டிருக்கையில், வெட்டுக்கறையானின் வடி வ மெடுத்து, அத்துடன் பேச்சை பாக்குவெட்டி போடாம லேயே வெட்டித் தள்ளிவிட்டு, அதே சுருக்கில், "இந்தப் பொம்பளையைத் தான் காண முடிஞ்சிச்சுதாக்கும் !...” என்று செல்லமாகச் சொல்லி, வினய பாவத்துடன் சிரிப் புக் கூட்டி நின்ருள் அவள். "என்ன சங்கதியுங்க எம் மச்சான் கிட்ட ?...” என்று கேட்டுவிடத்தான் துறு துறுப்பு பாய்ச்சல் காட்டிற்று. அதற்கு உரிமையுள்ள வள்தான். எ ன் ரு லு ம், நெஞ்சுக்கும் வாய்க்கும் எப்போதுமே ஒத்துப்போய்விட முடிகிறதா, என்ன?

"சரி. வெள்ளன கருக்கலோட வந்து அந்தப் புள்ளை யாண்டானைக் கண்டுக்கிடுறேன். தலைக்கு மேலே உள் ளாப்பிலே ஒரு தவசல். அதான் வந்தேன்,” என்று பூடக மாய்ச் சொல்லிவைத்தவராக அந்த மனிதர் அங்கிருந்து நகர்ந்தார்.

அவள் திரும்பி உள்ளே வழி நடந்தாள். தொங்க லில், கோலப்பன் படுத்துக் கிடக்கும் பாய் காலில் இடறி யது. அது அவளது நெஞ்சயே இடறிவிட்டது.

அள்ளிக் கொட்டிய குதிர் நெல் அள்ளாமலே குறைந்துவிட்ட பான்மையில், அமைதியின் கங்காணப் புள்ளி'யில் இடுக்கல் முடுக்கல் கண்டு, அதன் விளைவாக, அவளது அயிரைமீன்விழிகள் இரண்டும் நீந்தி விளை யாட ஊற்றுத் தோண்டத் தொடங்கின!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/105&oldid=612010" இலிருந்து மீள்விக்கப்பட்டது