பக்கம்:மருதாணி நகம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கல்லில் அகலியை

"ஏண்டி பஞ்சவர்ணம் ! காதிலே விளுந்தாச்சா சேதி?...” என்று கொண்டையை இடது கைப்பெருவிர லால் முடிந்து, கொண்டை ஊசியைச் செருகிக்கொண்டே கேட்டாள் பவளக்கொடி.

"அப்பிடி யாதொரு துணுக்கும் வந்து சேரலையே, பவளம்! என்னடி சங்கதி? சொல்லப்புடாதா? கோடி வூட்டு சுபத்திரைப் பொண்ணு சடங்காயிருச்சா? இல்லே, ஒனக்கு சிலட்டுர்ச் சம்பந்தம் சாடிக்கை தெகைஞ்சு வந் திருச்சா ? சொல்லடி குட்டி!” என்று சிரிப்பைக் கக்கிளுள் பஞ்சவர்ணம் கைவளைகளை உருவிவிட்ட வண்ணம். தேரோட்டத்தன்று வாங்கி வந்த கத்தரிப்பூ வர்ணப் பொட்டும் ஜிகினத்துள்ளும் அவள் நெற்றிக்கு கண் இல் லாத குந்தகத்தைப் போக்கி விலக்கின. இடம் பெயர்ந்து வழிவிட்ட விழிகளின் பார்வையின் தீட்சண்யத்தில், பவளக்கொடி சுற்றினுள். குடை ராட்டினத்துக்குக் காசு கொடுக்காமலே சுழன்ருள். பணம் மிச்சம் !

"நீ என்னடி ஆத்தே, ஊருச் சங்கதியைப்பத்தி தலையசரி கணக்கு ஒப்பிக்கிறது கணக்கிலே கேட்கிறே? நான் பேச வந்தது நம்ம ஊரைப்பத்தி இல்லே; ஒலகத்தைப் பத்தி யாக்கும்!"

"ஆத்தே பவளம்! அப்பிடிச் செப்புடி தில்லானே ! ஒலகத்தைப் பத்திப் பேசறதை ஒங்க ஒண்ணு விட்ட அண்ணுச்சி வூட்டுப் பொறத்தாலே ஒண்டி நின்னு ஒட்டுக் கேட்டுப்புட்டு ஓடியாந்து எங்கிட்ட சொளத்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/106&oldid=612011" இலிருந்து மீள்விக்கப்பட்டது