பக்கம்:மருதாணி நகம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 105

போறியாக்கும் ? ம், சொல்லு ! நீ வாயைத் தொறந்தா, அங்காடிக் கூடைக்காரி களத்து மேட்டுப் பொட்டலிலே ஆப்பக்கடை பரப்பின கதையிலேயில்ல ஒரேமுட்டா சேதிங்களைக் கொட்டித்தீருவே?..."

"அதுப்படி ஒண்னும் நடவாது. அச்சப்படாதேடி

! or

ஆத்தே !

'ஊம் பொட்டன. புட்டுவை சேதியை !”

"நம்ம நாட்டுக்கு ஆசைப்பட்ட வெள்ளைக் காக் கையை அடி மண்டையிலே அடிச்சுப் போடாம, அது மூளையிலே தட்டிவிட்டு, அவங்க சொந்த மண்ணுக்குக் கப்பல் ஏத்தி வச்சுப் புட்டாங்களாம் நம்ம நாட்டுக் கதரு வேட்டி காந்தி தாத்தா!... எங்க முத்தையன் அண்ணுச்சி தான், நீ ஊகம் வச்சாப்பிலே, சேதிக் காயிதத்தைப் படிச்சுச் சொல்லிக்கினு இருந்தாக, காலம்பற, அந்திக்கு நம்ம கோயிலு பஞ்சாயத்துத் தரையிலே கூட்டமாம்: காங்கிரசுக் கூட்டமாம். ஊருப்பட்ட காலத்துக்கு நாம இத்தனை கோடிப் பேருங்களும் கொத்தடிமைகளாத்தான் இருந்திருக்கோமாம். இதுக்கூட அவுகசொல்லித்தான் எனக்கு மட்டுப்பட்டுச்சு,” என்று அதிசய முத்திரை பதித்துப் பேசிளுள் பவளக்கொடி. -

"இந்த நடப்பைச் சொல்லத்தான் இம்மாந்தொல்ைவு கால் கடுக்க நடந்தாந்தியா? கெட்டுச்சுப் போ!...இந்தத் தாக்கலெல்லாந்தான் எனக்குப் பழங்கதை யாச்சுதே?... பூவத்தக்குடி ஆசாரி ஐயா கொண்டாந்து போட்ட சேதித் தாளிலேதான் அம்புட்டு வெசயமும் வெட்ட வெளிச்ச மாய் போட்டிருக்குதே? ப்யூ...!" என்று அகம்பாவத்தைக் காட்டியும் காட்டாமலும், தன்னைச் சமாளித்துப் பேச்சுத் தொடுத்தாள் பஞ்சவர்ணம். அந்த நாளென்ருல், தனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/107&oldid=612012" இலிருந்து மீள்விக்கப்பட்டது