பக்கம்:மருதாணி நகம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மருதாணி நகம்

குத் தெரிந்த விடுதலையின் சரித்திரத்தை அத்துபடியாக ஒப்புவித்து விட்டுத்தான் வாய் எச்சிலைத் துப்புவாள். ஆனால், இப்பொழுது அவளை வந்தணைந்த அனுபவங் கள் அவளுடைய நெஞ்சத்தின் தற்பெருமைக் கனலை அனைத்து விட்டிருந்தன.

"ஒனக்கு என்னடியாத்தே நாலுஎழுத்துப் படிச்சவ. நீ இதுவும் பேசலாம். இன்னமும் பேசலாம். புலந்திரன் களவுமாலை, தேசிங்கு ராசன் கதை, மதனகாமராசா கதை அல்லாத்தையும் ராகம் போட்டுப் படிச்சுக் காட்டி, படிச்சுக் காட்டியே ஊரு வயசுக் குட்டிங்களையெல்லாம் கைக் குள்ளாற போட்டு மடக்கி வச்சுக்கிட்டிருக்கியே ? அது கெடக்குது. ஆமா, ஒம் மச்சான்... அதான் புதுமச்சான் காரரு அவங்க ஊரு நாட்டுப் பக்கத்திலேருந்து இன்னம் திரும்பலையா? யாதாச்சும் விசயம் காத்திலே பட்டு வந்திச்சா?..அஞ்சாறு கிழமை படிதாண்டிப் போயிருச்சே

4:

-

பஞ்சவர்ணம் ?..

இந்த ஒரு விளு, ஒன்பது வகைப்பட்ட உணர்ச்சி பேதங்களை எழுப்ப, அந்த முக மாறுதலின் காரணமாக, பஞ்சவர்ணத்தின் கவர்ச்சி மிக்க கண்களும் உதடுகளும் துடிக்கத் தொடங்கின. அத்துடிப்பை வெளிக்காட்டாமல், ஆ ைல் குமிண்சிரிப்பை மட்டும் வெளிக்காட்டியவாறு அவள் பேசலுற்ருள்: நீஇந்த ஊரிலேதானே இருக்கே? ஒனக்கு ஒண்ணும் படலையா? அவுக வந்துக்கிட்டும் போயிக்கிட்டுந்தான் இருக்காக, ஊரிலே அறுப்பு , கங்காணம் அல்லாம் சுமந்து கிடக்குதாம். எல்லாம் முடிஞ்சடியும், எங்க கண்ணுலம் நடக்கப் போவுது. நம்ப ஊரு மணியக்கார ஐயாகூட போன மாசம் எனக்கு ஒத்

3r

தாசை செய்யிறதாச்செல்லிப் போனங்களே!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/108&oldid=612013" இலிருந்து மீள்விக்கப்பட்டது