பக்கம்:மருதாணி நகம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 107

“ரொம்பச் சந்தோசம், பஞ்சவர்ணம். அப்பன்ன எனக்குக் கண்ணுலப்பறுக்கை வெரசாவே கெடைச்

சிடும்னு சொல்லு!”

'கண்ணுலத்துக்கு ஊரு ஒக்க ஒண்னு கூடாத வங்க கழுசடைன்னு நம்ப பக்கத்திலே ஒரு பேச்சு இல்லியா ? அதொப்ப நாமளும் நடக்கமாட்டமா?... ஒனக்கு மட்டுமா விருந்து ? ஊரு விருந்து வைக்க வேணும்னு கூட எங்க மச்சான்காரரு ஆசைப்படுருரு. அவுகளுக்கென்ன, களத்துமேட்டு நெல்லு இன்னம் நாலுவூட்டுக் கண்ணுலத்துக்குக் காணுமாமே?...”

"ஆத்தாடி! நீ கொடுத்துவச்ச புண்ணியவதி தான்.

ஆமா, நீ அந்த முன்னவே அறிவியா?"

"முன்னே அறிஞ்சாத்தான் நேசமா?”

"அதுவுஞ் சரிதான், பஞ்சவர்ணம் முன்னே அறிஞ் சவங்க நேசம்தாம் காத்தோட காத்தாப்பூடுச்சே?”

"பழங்கதை அத்தோட தொலையட்டும்?"

"அதுவும் மெய்தான், இந்தக்கோலப்பன் ஆம்பளை யைப்பத்தி எங்க முத்தையன் அண்ணுச்சியும் அது சேக் காளிங்களும் புரளி பண் ணி ணுங்களே, அதைப்பத்தி ஒனக்கு ஏதும் கவலை இல்லை தானே?...”

"ஆமா, நான் ஏதுக்குக் கவலைப்படனும்? இந்த மச்சான் நல்ல ஆளு இல்லைன்னு, போன சந்தைக்கெடு வப்பக் கூடத்தான் ஒரு சேதி விழுந்திச்சு, எ ன க் கு என்னமோ, இந்த மச்சான் பேரிலே ஒரு நம்பிக்கை விழுந்திருச்சு. எங்க கஷ்ட்மெல்லாம் இவுகளாலேதான் விடியப்போவுதின்னு எனக்கு ஒரு திடம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/109&oldid=612014" இலிருந்து மீள்விக்கப்பட்டது