பக்கம்:மருதாணி நகம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 08 மருதாணி நகம்

"மெய்தான், மெய்தான்.மனசுகொண்டது மாமாங்கம், ஆமா, ஒருவாடடியாசசும உம புது மசசான ஊருககுப பயணம் போய் வந்தியா?”

"இல்லே, இல்லே. கண்ணுலம் கட்டி முடிஞ்சடியும் தான் அழைச்சுக்கிட்டுப் போகும். இப்பிடித்தான் அவுக அப்பவேபுடிச்சு சொல்லி வாராங்களே!...

"ஆமா, ஆமா. நீ கெட்டிக்காரி. கெட்டிக்கார ஆம்ப ளைக்குள்ள புத்திசத்தியும், அனுபவப்பட்ட பொம்பளைக்கு உண்டான யுத்திரோசனையும் கொண்டவ நீ.உன்மச்சான் மனசைப் பார்த்துக்கிட்டவளுக்கு, அவுகளோட ஊரைப் பார்த்து என்ன ஆகப்போவுது?... என்னமோ. ஆத்தா பெரியவ யாதொரு விக்கினமும் வில்லங்கமும் வைக்காம உன் கண்ணுலத்தை மோக்களாவா கொட்டு மோளத் தோட நடத்தி வைக்கோணும். அப்ப, நான் வரவா, பஞ்சவர்ணம்?” என்று விடை வாங்கிக்கொண்டாள் பவளக்கொடி.

பவளக்கொடி போனதும், தொல்லைகளின் தோழி போனதாக அவள் பொருள் கொள்ள வில்லையா?அடியில் சகதி தேங்கிக் கிடந்தாலும், மேல் பரப்பில் தெளிநீர் துலங்கக் காணப்படுமே சிற்ருேடை, அதைப் போன்று தான் இருந்தாள் பஞ்சவர்ணம்-இந்தச் சில நாட்களாக! ஆல்ை, ஓடையில் கல் விழுந்தது. கல்லாளுள் பவளக் கொடி. அதன் பலகை, பஞ்சவர்ணம் கல்லாகி விட்டாள்.

கல்லான அகல்யாவின் சாபவிமோசனத்துக்கு மட்டுந்தான் ரீ இராமபிரானின் பாததுாளிகள் பயன் ஈந்தனவோ?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/110&oldid=612015" இலிருந்து மீள்விக்கப்பட்டது