பக்கம்:மருதாணி நகம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 கொம்புத் தேன் அவள்

கல்லினுள்ளே உறைந்திட்ட அகல்யைக்கு விடி பொழுது உதித்தது.

அதுபோல, பஞ்சவர்ணமும் ஒருநாள் இல்லா விட்டால் ஒரு நாள், உதயத்தின் செக்கர் ஒளியைத் தரிசிக்கத்தான் போகிருள் உண்மை மொழியா இது ? அவ்வாறு தான் பூவத்தக்குடி காந்திஜி சங்கக் காரிய தரிசி சோமசுந்தரம் நம்பினர். பஞ்சவர்ணத்தின் நல்வாழ்வுக்காக தெய்வத்திடம் தண்டனிட்டு நேந்து' கொண்ட புண்யாத்மாக்களில் அவரையும் சேர்க்க வேண்டும்.

நல்லவர் பொருட்டே மழை.

ஆவணத்தாங்கோட்டைச் சார்பிலும் மழை பொழிந் தது. பின்னர், அதுவே கால மழையாகவும் ஆனது.

துன்ப அனுபவங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த மட்டில் வேண்டுமானல், நஷ்டக்கணக்கு ஆகும். ஆனல், இதே துயரக் கீற்றுகள் இல்லையென்ருல் வாழ்வில் சுமை ஏது, சுவை ஏது? இவை அத்தனையும் லாபப்புள்ளியில் அல்லவா எழுதப்பட வேண்டும்?

அப்படிப்பட்ட நினைவை உருவாக்கத் தெம்பு பெரு விட்டால் கூட, அப்படிப்பட்ட நினைவு தன்னையும் அறி யாத விதத்தில் தன் குறுதி நாளங்களிலே குத்திட்டு நிற்பதைப் பரவலாக உணராமல் இல்லை பஞ்சவர்ணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/111&oldid=612016" இலிருந்து மீள்விக்கப்பட்டது