பக்கம்:மருதாணி நகம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 மருதாணி நகம்

முன்னைக்கு இப்ப நான் எம்புட்டோ மாறிப்புட்டே ளுக்கும் ' என்று அவளுக்குள்ளாகவே இத்தகையதொரு நினைப்பு சில தினங்களாக அவளுள் எழுந்து பரவிக் கொண்டுதான் இருக்கிறது.

தேர் புறப்பட்டால், அது நிலைக்கு வராமல் தப்ப

முடியுமா? ஆளுல் காலத்தேர் அப்படி நிலைக்கு வருவது சாத்தியமா?

'இந்த நாப்பது, நாப்பத்தஞ்சு நாளும் எப்பிடித்தான் மாயமா மறஞ்சுதோ ? புரியவே மாட்டேங்குதே? "என்று பூத்தொடுத்த பூவை, மறுவினுடியில், இத்தனை நாளிலே ஒரு வாட்டி கூட மச்சான் வரக் காணலியே ? என்று எண்ணமிட்ட தருணத்திலே, நினைவுப்பூவின் வாடையில் துயரத்தின் நெடிதான் நொடியாய் அமைந்திருந்தது. நொடியில் குடம் சாய்ந்த தட்டு வண்டியானுள் அவள். குப்புற விழுந்தவள் முகத்தைத் தடவிக்கொண்டு எழுந் ததைப்போல இருந்த இருப்பிடத்தினின்றும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

நல்ல வெயில் பொசுக்கிற்று.

வாசல் தடத்தில் வழி மறித்து நடந்த பவளக்கொடி யைக் கண்டதும், அவள் தன் தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள். அன்னிக்குப் புளுகினது போதும். அதாலே எனக்கு வந்த மண்டைக் குத்தும் நெஞ்சு வலியும் போதும். இப்ப வேறே வந்து எம்புட்டு உசிரை வாங்கப் போரு....!

ஐந்து நாட்களாக அவளுக்கு மேலுக்குச் சுகமில்லை. பாயும் படுக்கையுமாளுள் அவளுக்குத் தோழியான கோவிந்தம்மா, அவளது தொழிலுக்கும் தோழியாளுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/112&oldid=612017" இலிருந்து மீள்விக்கப்பட்டது