பக்கம்:மருதாணி நகம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 1 s 1

சுட்டு வைத்துச் சென்ற இட்டலிகளில் மிச்சம் மீதி இருந்ததைத் துகையலுடன் குழப்பி, இரண்டு கவளமாக உருட்டிப் போட்டு, வெந்நீர் குடித்தாள். மச்சான் ஏன் இங்கிட்டு வரலே ? எம்மேலே கோவமாத்தான் இருக் கோணும். அதுக்காவ, இப்பிடித் தண்டு முறிஞ்சாப்பிலே, உருமாலை சாத்தின சன்னுசிச் சாமியா சொந்த பந்தத்தை விட்டுப்புட்டுப் பறிஞ்சிடலாமாக்கும் ? கண்ணுலத்துக்கு முந்தி இப்பிடி கோபப்பட்டு போனது சரி, மாப்பிள்ளே முறுக்குன்ன, பின்னே லேசா ?....ஆன, கண்ணுலம் கட்டினதுக்குப் பொறகாலே இதே ஆம்பளே என்னை இதுபோல விட்டுப்புட்டுப் பறிஞ்சிராதிங்கிறது என்ன நிச்சயம்?... ஊக்கும்!...அப்படிக்கொத்த ஆசாமி இல்லே எங்கமச்சான் !... நல்லவுக... ம் 1.

இந் நினைவு முகிழ்த்ததற்கு நேரான பொழுதில், பஞ்சவர்ணம் அன்றைக்கு-மனிதாபிமானம் கொண்டு முத்தையனின் இல்லம் நோக்கிப் பாய்ந்த அன்றைக்கு கோலப்பன் வெஞ்சினம் பூண்டு அவளிடம் சொன்ஞ் னல்லவா, அந்தப் பேச்சு-"ஒன்னை நான் திரவுசாப் புரிஞ் சிக்கிட்டேன்!” என்று கோபம் கொந்தளிக்கப் பேசிய அப்பேச்சு தோலுரித்துக் கொண் டு எ திரொலி பரப்பியது.

வந்தவர்கள்-போனவர்களிட மெல்லாம் என்னென் னவோ சாக்குப் போக்கு சொல்லித் தப்பித்தாள் பஞ்ச வர்ணம்."மச்சானுக்கு அறுப்புக் காலம்,"என்ருள் ஒருத்தி யிடம். "அவுகளுக்குக் காயலாம்?"என்ருள் இன்னுெருத் தியிடம். "பொறக்கு மாசம் ஆத்தா சந்நிதானத்திலே எங்க ரெண்டு பேருக்கும் கண்ணுலம்!” என்று மூன்ரும் நபரிடம், இயம்பிளுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/113&oldid=612018" இலிருந்து மீள்விக்கப்பட்டது