பக்கம்:மருதாணி நகம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f : 2 மருதாணி நகம்

அனைத்தையும் நம்பினர்கள். நம்ப வேண்டியவர்கள் ஆளுர்கள்.

ஏனென்ருல், கோலப்பன்-பஞ்சவர்ணம் நேசம் அப்படி நினைவு அப்படி நடப்பு அப்படி !

“ராத்திரிப் பொழுது போக, சொச்ச நேரமெல்லாம் எனக்கு எம்மச்சான் இல்லாட்டி பொழுதே ஓடாது," என்று கோலப்பனுக்கு மச்சான்' என்று உரிமைப்பட்டம்

கொடுத்துப் பேசித் தீர்த்த காட்சிகள் ஒன்ரு, இரண்டா ?

ஒய்வாக ஓலைப்பாயை எடுத்துப் போட்டுக் குந்தினுள் அவள். ஓய்வில்லாமல் சுற்றிக்கொண்டிருந்த செக்கடிச் சத்தம் அவளது மன உளையில் நசுங்கியது. ஆமா மூக்குடிமச்சான் எப்படிப்பட்ட ஆளு? ஒன்னும் தடயம் புரியலையே? அது காசுபனம் இல்லாத ஆளாளுக்கூட பாதகமில்லே? ஆன. ஆம்பளை நாக்குச் சுத்தம் உள்ள தாயிருந்தா அதுவே போதுமே!... பின்னே, எதுக்கு அது அப்பைக்கு அந்த முத்தையன் மச்சான் செத்துப் பூட்டதா பொய் பேசிச்சு? பொருமையிலவா ? ... ம்.. அதோட மூஞ்சியை முதல் முதலிலே கண்டடியும் எனக்கு ஒரு மயக்கம் விளுந்திடுச்சு!..ம்!...”

அவள் ஊருக்குப் பயந்தாள். அதுக்குச் சமமாக தன் மனத்துக்கும் பயந்தாள். 'என் குட்டு அம்பலமாகிப் புடாம இருக்கோணுமே சாமி" என்று கும்பிட்டாள். யாருக்கும் தெரியாமல் சந்தைப் பேட்டையில் வாங்கி வந்த ரவிக்கைத் துண்டை வைத்துக்கொண்டு, "எம் மச்சான் ஆள்வசம் குடுத்து அனுப்பியிருக்காக." என்ருள். அப்பொழுதுதான் அவளைத் தேடிக்கொண்டு நாகுடிச் சாமியாடி வந்து சேரலார்ை. இந்த ஆளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/114&oldid=612019" இலிருந்து மீள்விக்கப்பட்டது