பக்கம்:மருதாணி நகம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 1 s 3

மலை முழுங்கி மகாதேவன். எதுக்கு எம் மச்சானைத் தேடிக்கிட்டு வராரு? என்று நொடிக்கு நூறு மூச்சு ஐயப்படலானுள்.

அவள் கேட்ட கேள்விக்கு, "சும்மாதான் கோலப்ப னைத் தேடிக்கிட்டு வந்தேன். அந்தப் புள்ளையோட காணிகரை லாவாரம் விசயமாய்ப் பேசவேணும். அவ் வளவுதான் துப்பு.” என்று அடைத்து விட்டார் அவர்.

பிறகு, அடுத்த நான்காம் நாள், அவள் சாமி யாடியை வலியத் தேடிச் ச்ென்று, தனக்கும் தன் நேச மச்சான் கோலப்பனுக்கும் இடையே முளைத்திட்ட பிணக் கின் கதையை விஸ்தாரமாக விவரித்தாள். அத்துடன் அவள் இன்னெரு வேண்டுகோள் ஒன்றையும் விடுத் தாள். "நீங்க எனக்குச் சொந்தம் சோவாரிக்காரக. அதாலே, மனந்துணிஞ்சு ஒரு காரியத்தை ஒங்க தோளிலே ஒப்படைக்கப்போறேனுங்க. எனக்காகப்பரிஞ்சு பேசி, எம்மச்சான் கோவத்தை ஆத்திக் கையோடவே இட்டுக்கிட்டு வந்துப்புட வேண்டியது ஒங்க பொறுப்பு. ஆமா, சொல்லிப்பிட்டேனுங்க," என்ருள்.

சாமியாடி சாமியாட்டம் போட்டுக் காரியத்தைத் தீர்த்து விடுவார் என்று முக்காலும் நம்பினுள் அவள்.

நம்பிக்கை வீண் போவதில்லைதான்!

போனவர் திரும்பினர். போன மச்சான் திரும்பி வந்தால்தானே பூ மணம் கமழ்ந்து கொழிக்கும்?

“என்னுங்க?..." "ஒண்னும் பதட்டத்துக்கு இடமில்லே!" "பொறகு?..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/115&oldid=612020" இலிருந்து மீள்விக்கப்பட்டது