பக்கம்:மருதாணி நகம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 மருதாணி நகம்

'உம் மச்சான் காதிலே உம் மனசான மனசையே புட்டுவச்சுப் பேசினேன். அந்த ஆளு பொறி கலங்கிப் போய்க் குந்திட்டாரு. உம்மேல மன வருத்தம் துளியும் இல்லையாம். தண்ணி இறவையப்ப கால் சுளுக்கிக் கிடுச்சாம். அதாலே அங்கிட்டு இங்கிட்டு ஒரு தப்படி நகர ஏலலையாம். மத்தப்படி, யாதொரு சந்தேகத்துக்கும் இடமில்லையாம். படிச்சுப் படி ச் சு ச் சொல்லிச்சு,” என்ருர் கிழவர்.

"வேற எதுவும் மூச்சுக் காட்டலங்களா?”

“ஒனக்கு என்னமோ தங்கத்தாலிச்சரடு தந்தாராமே, அதைப் பத்திரமாக் காப்பாத்தி வச்சுக்கிட வேணுமாம். இதையும் நினைப்பூட்டச் சொன்னுரு!”

“நல்லதுங்க!...”

"அப்பறமா, இந்தப் பத்து ருவாக் காசை ஒங் கையிலே நீட்டச் சொன்னிச்சு!"

"மெய்யாலுமா?”

"பின்னே?"

"அல்லாம் நல்ல சகுனந்தானுங்க, ஒங்க முகராசி ஒசத்திதானுங்க!”

"இன்னெண்ணு!”

"சொன்னக் கேக்கிறதுக்குத் தவம் இருக்கேனுங்க!”

"ஐப்பசித் தொடக்கத்திலவே கண்ணுலத்துக்கு டும் டும் மோளம் கொட்டிப்புடனும்னு ஒத்தைக் காலாலே நிக்கிருரு" சொல்லாடல் நிகழ்த்திய வேளையில் ஏனே அவர் முகம் இருளடைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/116&oldid=612021" இலிருந்து மீள்விக்கப்பட்டது