பக்கம்:மருதாணி நகம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 1 s 5

"ஆமாங்க. இன்னுெரு காலுதான் சுளுக்குப் புடுச் சுப்போச்சே! பாவம், ஒத்தைக் காலாலே தானுங்களே

நிக்கவேணும்?"

நாகுடிச் சாமியாடி குபிரென்று சிரித்துத் தள்ளினர்.

“நல்லாப் பேசுறியே, தங்கச்சி, கிச்சுகிச்சுத் தாம்பாளம்

மூட்டுருப்பிலே!”

பஞ்சவர்ணத்திற்கு தன்பேச்சே இப்பொழுதுதான் பிடிபட்டது. நகைச்சுவையின் ரசிப்பில் பிடிபட்ட பிடி யாளுள். மதமதப்பு ஓங்கியது; தன்னடக்கம் மிஞ்சியது.

கொம்புத்தேன் அவள்!

வந்தவர் புறப்பட ஆயத்தப்பட்டார். சுருக்குப் பையில் கிடந்த வெற்றிலைக் கிழிசலை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு பாக்கையும் சுண்ணும்பையும் துளி துளியாகப் போடலானர். தலைகீழ்ப் பாடமான ஆசாமி போலிருக்கிறது !

பொழுது பட்டது.

புரட்டாசி வெள்ளியென்ருல், சொக்கப் பச்சைக்கு உள்ள மதிப்பு.

அகல் விளக்கு ஏற்றிவைத்தாள் பஞ்சவர்ணம். பூவத்தக்குடி நடராசர் கோயில் திருநாள் மண்டகப்படி யில் பிட்டுக்கு மண் சுமந்த விஷேசத்தைக் கண்டு வர வேணுமென்று அவள் தன் தோழிகளுடன் திட்டம் புனைந்திருந்தாள். குளித்து முழுகி, புதுசு உடுத்தியிருத் தாள். கன்னியாகுறிச்சி மஞ்சள் காவி காவியாக முகத் தில் ஏறியிருந்தது. இப்போதெல்லாம் பிடிசோறு கூடு தலாகவே உண்ண ஆரம்பித்தாள். எண்ணம் சுமக்க வில்லையெனில், பசி சுமக்கத்தானே செய்யும்?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/117&oldid=612022" இலிருந்து மீள்விக்கப்பட்டது