பக்கம்:மருதாணி நகம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 மருதாணி நகம்

கோலப்பனை நெஞ்சிலும் நினைவிலும் ஏ ற் றி வைத்து, ஏற்றம் அமைத்து, கைதொழுது, களிப்புச் சிந்து பாடி வந்த பைங்கிளியின் விழிவிச்சில் அரிக்கன் விளக்கின் தீபஒளி பட்டுத் தெறித்து விலகியது. வெற்றிலை வாயைக் குதப்பிக்கொண்டே வா ச லு க் கு வந்தாள். இளவட்டம் ஒன்றின் முகம் நிழல் படமாகத் தென்பட்டது. ஆளை இனம் காண முடியவில்லை அவளால். அந்த உருவம் வாசலில் நின்ற வேப்பமரத் தடியில் நின்றது. உடன் வந்தாள் முதியவள் ஒருத்தி. அவள் வீட்டின் முகப்புப்படிக்கட்டை மிதித்துக்கொண்டே "ஆயி, பஞ்சவர்ணம்' என்று குரல் கொடுத்தாள்.

கைவிளக்கும் கையுமாக, மலர்ச் சிரிப்பும் மைவிழியு மாக விரைந்து வந்த பஞ்சவர்ணம், அங்கே கிழவி சீரங்கம் நிற்கக் கண்டாள்: ஆமாம், சீரங்கம் பெற்ற பிள்ளைதான் முத்தையன். -

"யாரு, அயித்தையாங்கிறேன்? வாங்க, வாங்க, தடயம் காட்டாம வந்திருக்கீகளே? சொல்லிவிட்டிருந் தாக்க, நானே ஓடியாந்திருக்க மாட்டேன, பின்னே?”

- "அதுக்கெல்லாம் நேரம் காலம் வேணுமா, ஆயி?... இப்ப நாந்தான் ஒன்னைத்தேடி வரவேணும் இதான் நாட்டு வளமை!" என்று சொல்லி வந்தாள் முதியவள்.

அப்போது அவள் ஏந்திவந்த வெற்றிலை பாக்கு, பழச்சிப்பு, கற்கண்டு, சேலமடி ஆகியவற்றின் கொத்துப் பூவான அந்த மரவைத் தட்டைப் பார்த்தாள் பஞ்ச வர்ணம். அவளுக்கு ஒரு கணம் தி கீ ரெ ன் றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/118&oldid=612023" இலிருந்து மீள்விக்கப்பட்டது