பக்கம்:மருதாணி நகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம்

திட்டி வாசல் :

அன்பில் சோதனைகள் பிறக்கின்றன; சோதனை களினின்றும் அன்பு பிறக்கிறது. இதுவே வாழ்வு.

வாழ்வின் இந்த நியதி விளையாட்டிற்கு ஓர் இலக்குப் புள்ளிதான் காதல் என்னும் எழிற் கனவு.

நாட்டுப் புறங்களில் நேசம் பூப்பதும், பக்குவம் கொள்வதும் ஒரு தனிக் காவியம் போல.

பஞ்சவர்ணம் என்று அவளுக்குப் பெயர். சூது வாது களின் வாடைக் காற்று நெடி சொடுக்கும் புழுதியில் அவதரித்த பெண் அவள். அவள் பட்டிக்காட்டு மண்ணுக்கே ஒரு விளக்கு. அவள் குணம் அப்படி.

பெண் என்ருல் தி. தியுடன் விளையாடுவதற்கு ஒரு வரம்பு வேண்டும்.

பஞ்சவர்ணம் விந்தைப் பிறப்புத்தான் !

அவள் போராடவேண்டிய பிரச்சினைகள் ஒன்ரு இரண்டா?

அவள் கதையே ஒரு சிக்கல் ஒரு சிருஷ்டி!

புரட்டுங்கள் பஞ்சவர்ணத்தை ரசிக்கலாம் !...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/11&oldid=611916" இலிருந்து மீள்விக்கப்பட்டது