பக்கம்:மருதாணி நகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l பெண் ಹನ್

பஞ்ச வர்ணக் கிளி என்ருல், அதன் அந்தத்திற்கும், சந்தத்திற்கும் கதை சொல்லவேண்டுமா ? இல்லை, கதைதான் கேட்கவேண்டுமா? இரண்டும் தேவையில்லை; இரண்டுக்கும் தேவையில்லை அல்லவா?

காரணம் இதுதான் : பஞ்சவர்ணக்கிளி என்ருல், அதன் அழகு தனித் தன்மை வாய்ந்தது ; அதன் குரல் தனித்து இயங்கும் பண்பு வாய்த்தது! -

வளர்த்த பாசம் பற்றி, வருடிய நேசம் பற்றிப்பிடித் திருந்த அந்தக் கிளியை நொடிப்பொழுதிற்குள் பறக்க விட்டுவிட்டாள் அவள். ரவைப் பொழுதிற்குள்ளே நொடியில் குடம் சாய்ந்த ரேக்ளாவைப் போல அவளு டைய மனம் சங்கடப்பட்டது. பிறகு, முகவாய்க்கட்டை யில் சுட்டு விரல் தொட்டுப் பிரமாதமாக யோசனை செய் தாள். யோசனை பக்குவம் பெறவேண்டாமா? ஆகவே, அவள் மண்ணில் மனம் பதித்தபடி, விண்ணில் சித்தம் பதித்தாள். மோகனம் முகிழ்த்த உடுக்கள் உடுக்குக் கொட்டி விளையாடின. அவள் கைகொட்டிச் சிரித்தாள். அடுத்த இமைப்போதிற்குள்ளாக, அவளது உடல் அசைந்து தள்ளாடியது. சிலும்பல் தட்டி ஒட்டிக் கிடந்த ‘கஞ்சமலர்ப் பாதங்கள் பசை விலகின மாதிரி விலகலா யின. தொபுகடி ரென்று விழுந்தாள் அவள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/12&oldid=611917" இலிருந்து மீள்விக்கப்பட்டது