பக்கம்:மருதாணி நகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 1 I

நீரலைகளின் உயிர்த்தத்துவம் கதை சொல்ல, அவள் நெஞ்சிறுக்கும் சிரிப்புச் சிரிக்கத் தொடங்கிவிட்டாள் !

கன்னிக்குத் துணையாளுள் கன்னி ! நிலவுக்கு இணையானது நிலவு !

பெண்கனி அவள் ! அவள் பஞ்சவர்ணக்கிளி !

மூன்று கைவீச்சுக்குச் சுற்றளவு கொண்டிருந்தது அந்தக்கேணி, மலையாய்க் குவிந்திருக்கும் தென்ன்ங் குலையைத் தலசீவிக் கொத்திவிட்டதும், சுவைநீர் புன லாய்ப் பாய்ந்தாற்போல,அவ்வளவு நிறை பெருக்காகவும் துலாம்பரமாகவும், இனிப்பாகவும் இருந்தது கிணற்றுத் தண்ணிர். பூக்கரங்கள் இரண்டினையும் கு வித் து, அந்த இ ைட வெளி யி ல் நீர் குவித்து, நான்கு மடக்கு குடித்தாள். கைகளை வீசி நீந்தி விளையாடிய அவளுக்கு மேனி வலித்தது. .ப்பூ என்று நையாண்டி படித்துவிட்டு ஒரு முறை முக்குளித்து எழுந்தாள். மறு படி அவளுக்கு அந்த நினைப்பு மூண்டது. அரைக் கணம் மோனநிலை. தெளிந்து வந்த நீர் வெளியிடை அவளது எழிலார் வதனம் தெரிந்தது. பார்த்தவள் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவளுக்கு உடம்பை * என்னவோ பண்ணியது!...

பஞ்சவர்ணம் லேசுப்பட்டவளா? அவள் அழகுக்கு அரும் பதவுரை விழிகள் கற்பனையின் கரு.

உதடுகளோ, இன்ப உணர்விற்கு அரண். அழகுக்கு அரும்பொருள் அவள். பஞ்சவர்ணம் என்ருல் . பஞ்சவர்ணம்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/13&oldid=611918" இலிருந்து மீள்விக்கப்பட்டது