பக்கம்:மருதாணி நகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மருதாணி நகம்

தன்னைத்தானே நோக்கி, தனக்குத்தானே ரசித்த வாறு இருந்த அவள் மேலும் தன் பார்வையைக் கீழே தாழ்த்திப் பார்க்க ஒப்பவில்லை. மண் விலக்கி, துரசு தூவி, காடு கடந்து நாலு கால் பாய்ச்சலில் பறந்து செல்லும் அரிமளம் பொலி காளை யைப் போல அவளது கன்னி மனம் ஆகியிருந்த அந்தரங்கம் அவளுக்கு மட்டுந்தான் அத்துபடி கண்களின் பார்வை கட்டிக்காட்டிய விளிம்புக் கோட்டில் அழகுச் சுவை சேர்த்து, அழகுணர்ச்சி சேர்ந்து தெரிந்த தசைத் திரட்சிகளின் மோகனம் அவளுள் மோகம் பரப்பியதோ? கைகளை முறுக்கிக் கொண்டாள்; விரல்களை நெட்டி பறித்தாள். கிணற்றின் சனி மூலையில் விளிம்பு பாய்ந்திருந்த வேப்பங்கட்டையில் ஒண்டியிருந்த வலதுகால் பாதம் விலகியது. பிறகு அங்கம் அங்கமாக அழுக்குத் தேய்த்தாள்; முழுகினுள். விண்மீன் தோழிகள் சிதறினர்!

இருந்திருந்தாற்போல, பஞ்சவர்ணம் கிணற்றின் அடியிலிருந்து மேலே அண்ணுந்து நோக்கினுள். ஏதோ ஓர் ஒலி படர்ந்து வந்துகொண்டிருந்தது. சீட்டி’ ஒலியா அது? -ப்பூ என்று அவள் திரும்பவும் தன்னுள் வாய்விட்டுக் கூறிக்கொண்டாள். கேணியின் சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த அனேகல் வரிசையை ஒருமுறை கண்ணுேட்டம் பதித்தவளாக, முதற்படியில் கால் பதித்தாள். அப்போது, நீரிடைப் பிரதிபலித்த உருவம் ஒன்றின் அசைவுக்கோலம் அவளை அசையாப்பதுமை யாக்கியது. ஆமாலே மெய்யாலுமே யாரோ துப்புக்கெட்ட ஆம்பளைச் சென்மந்தான் கமுக்க மாக நோட்டம் பார்த்துக்கிட்டு இம்மா நேரம் இருந் திருக்கும் போல!...து சமைஞ்ச குட்டி ஒளிஞ்சு மறைஞ்சு மேலு குளிச்சாக்க, அதைக்கூடவா ஒருத்தன் ஒளிஞ்சிக்கிட்டுக் காணுவான்? யாரு அந்தப் போகுடிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/14&oldid=611919" இலிருந்து மீள்விக்கப்பட்டது