பக்கம்:மருதாணி நகம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருக்கொழுந்து ஆனுள்

ஆசை வளர்ந்தால் கனவு வரும்; ஏமாற்றம் வளர்ந் தால், அழுகை வரும்.

ஆசைக்கும் ஏமாற்றத்துக்கும் ஊடாக வளர்ந்துவாழ்ந்து வந்தவள் பஞ்சவர்ணம். பெற்றவர்களின் முகாலோபனம் காணுதவள். இந்த ஒரு குறையே. அவளுக்கு வாய்த்திட்ட பெருங் குறையாகவும், அதுவே அதிர்ஷ்டத்தின் குறையாகவும் எண்ணிக் கருதி, கருத் தழிந்திருப்பவள் அவள். பருவத்தின் திசைமாற்றப் பகுதிகளிலே அவள் சமாளித்த துணை நிகழ்ச்சிகள் ஏட்டிலடங்குமா? இப்பொழுது முத்தையன் அவளை வசமாக மடக்கி விட்டான்! அவள் தன்மானத்தைக் கட்டிக் காக்க எண்ணித்தான், மணியக்காரரை அண்டி அவர் காதைக் கடிக்க முடிவுகட்டி யிருந்தாள். ஆனல் அவள் கட்டிய மனக்கோட்டையை தர்மப்பிரபு கலைத்து விட்டான். உதவி கேட்க விரைந்தவள் கேதம் கேட்டுத் திரும்பினுள்.

வெயில் சுள்ளாப்புடன் காய்ந்தது.

காய்ந்த அவள் வயிறு எரிந்தது.

எரிந்த கதிர்களிடை பாட்டொன்று பறந்தது.

பறந்த பாட்டில் பாவை சொக்கிள்ை.

சொக்கிய பூவையைச் சுழல அடித்தான் சேகண்டிப் பண்டாரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/133&oldid=612038" இலிருந்து மீள்விக்கப்பட்டது