பக்கம்:மருதாணி நகம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மருதாணி நகம்

'காலம் என்பது கடுகு போலே ராசாதி ராசா!-அது ஏலம் போட வாய்க்காதய்யா ராசாதி ராசா!-உன் ஒலம் கேட்டு அஞ்சாதவன் ராசாதி ராசா!-அவன் காலன் என்பான் அஞ்சிடாதே ராசாதி ராசா...!

சாவில் தொடங்கும் வாழ்க்கைச் சொப்பனமாக அந் தப்பாட்டுஅவளுக்குப் பட்டது. பட்டமரமானுள். பட்டமரம் நடந்தது; நறுவிசாகத் துளிர்த்தது. அந்தம் பொதிந்த ஏற்றப் பாட்டின் சந்தம் அவளை அலாக்காக எங்கோ தூக்கிச் சென்றது. கணுப் போன்ற கட்டங்களை கண்கள் மறத்தல்லேசா? லேசான இதயம் சுமை தாங்கியானது. பட்டிக்காட்டு மண் வளர்த்து வாழ்த்திய சேரிக்காதலர்கள் இருவர் தென்பாங்குப் பாடி, கஞ்சிக் கலயத்தைக் காலி செய்துகொண்டிருந்தார்கள். சுடு வெயில்; சுடும் கஞ்சி; சுடும்விழிலாகு. ஆம்சூட்டில்:குளுமை பிறந்தது போலும்!

பஞ்சவர்ணம் தோள் எலும்பைத் தடவி விட்டுக் கொண்டாள். வழி நடந்தாள். அவளுடன், நடந்த கதை யும் வழி நடந்தது.

ஒரு சமயம்: பூவத்தக்குடி காளியம்மன் திருநாள்

பஞ்சவர்ணம் பூத்த மலராக ஆவதற்குச் சில தினங். களுக்கு முன்னதாக ஒருநாள். அப்போதைய பருவநிலை, போதை ஏற்றத்தர்னே பார்க்கும்?. -

வந்தான் முத்தையன். லேஞ்சும் துப்பட்டாவும் இள மீசையும் செழித்துக் கொழித்தன. பணம் காய்க்கிற மரமும் நெல்லு காய்க்கிற மரமும் ஒங்ககிட்ட இருக்குது; நீங்க ராசா மவன் ராசா தான்! என்று நைத்தியம்’ படித்தபடியே வந்தாள் பஞ்சவர்ணம். தாழம்பூச் சித்தா டையும் கிளி முக்குச் சவுக்கம் ரவிக்கையும் அவளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/134&oldid=612039" இலிருந்து மீள்விக்கப்பட்டது