பக்கம்:மருதாணி நகம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம். 133

பருவத்தைக் கட்டிக் காத்தன. அவள் அவனைப் பார்த்த சடுதியில், அவனது பார்வையின் கோல வெறி'யைக் கூர்மையாகக் கணித்து விட்டாள்.

'இந்தாப் பாருங்க, ஒங்க கண்ணை எடுங்க. எனக்கு வெட்கம் வருது' என்ருள் அவள்.

"நான் எதுக்கு இப்ப எங் கண்ணை எடுக்கோணு மாம்?” என்ருன் அவன்.

“என்னையே உறுத்துப் பார்க்காம இருக்கத்தான்...!" . 'ஐய!...நான் ஒன்னைப் பார்க்கிறதிலே கூடவா ஒனக்கு வெக்கம் வந்திருச்சு...வெக்கம்?...”

'நீங்க என்னைப் பாத்தாத்தான் குத்தமில்லையே?..." "பொறகு?” “வந்து ... எம்பிட்டு...ஆத்தாடியோ...நானு சொல் லப்புடாது' என்று ஓடிவிட்டாள்.

ஆம்; அன்று விளையாட்டாக ஓடியவளை, இன்று தொல்வினை வினையமாக ஒட்டி விட்டதே!

ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு இல்லை என்பார்கள். ஆளுல் அவளது உள் மனம், காலத்தின் கோடு களால் உருவான காதல்பாட்டு ஒன்றைப் பாடச் சொன்னது. முத்தையன் பாடி ன ல் இன்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே!

அவன் பாடினன்:

வெத்தலை பாக்கு போட்டுக்கத் தாரேன் -

. அம்மான் மகளே நீ, வாத்தால்த் தண்ணி ஒடுறதாட்டம் - .

சிரிக்கப்புடாதா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/135&oldid=612040" இலிருந்து மீள்விக்கப்பட்டது