பக்கம்:மருதாணி நகம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 34 மருதாணி நகம்

அவள் அவனிடமிருந்து வெற்றிலை பாக்கை எதிர் பார் க் காம லே யே சிரித்துவிட்டு எதிர்ப்பாட்டுப் பாடலானுள் :

"ஒண்னு குடுத்து ஒண்ணக் கேட்டால் -

அத்தை மகனே நீ, ஒலகம் என்ன சொல்லுமிண்ணு

ரோசிக்கப்புடாதா?”

மறுபடியும் ஆண் குரல் ஒலி கிளப்பிற்று : "கம்மகதை ஊருக்குப் புரியும் பெரிய பொண்ணே நீ சும்மா வந்து கண்ணக்காட்டு சொக்கு பொடிதுவ'

பருவ மமதை சுழித்திட்ட கருவண்டுக் கண்கள் இரண்டையும் அவன் தொட, அவள் மனம் லயித்தாள். பெண் மனம் குரலெடுத்தது :

"கண்ணெதுக்கு காதெதுக்கு ஆசைமச்சானே உன் கண்ணுன நானே ஒனக்கு நேசமச்சானே!"

இருவரும் காதலொருமித்து, ராக்காச்சித் தாயின் சந்நிதானத்திலே கையடித்துக் கொண்டு, இசைவுப் பரிவர்த்தனை நடத்திக்கொண்ட அந்தச் சுபவேளை’ எங்கே ஒளிந்து கொண்டதோ?

முட்டின்றி காலம் ஊர்ந்தது. முட்டி தூக்கிவந்த கோவிந்தம்மா அது தருணம் பஞ்சவர்ணத்திற்குச் சுய உணர்வைத் தெளிக் க, தண்ணீர் தெளித்தாள். “ம.ச்" என்ற வாய்ச்சறுக்கு லுடன் நல்ல காலம், தப்பிவிட்டாள். இல்லாவிட்டால், சுட்டிப்பெண் அவளைத் தப்ப விடுவாளா, பின்னே?...

பஞ்சவர்ணத்தின் மனக்கூத்து ஆடிய விந்தைப் பேயாட்டத்தை அவளது முகத்திரை வழியே அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/136&oldid=612041" இலிருந்து மீள்விக்கப்பட்டது