பக்கம்:மருதாணி நகம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 135

பாங்கி ஊகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்! அதனுல்தான், கிட்டத்தட்ட அவளும் மெளன நிலையைக் கைப்பற்றிள்ை.

“ என்னலே, ஒட்டிக்கு ரெட்டியா லாவம் கெடைச் சவுகளாட்டம் சத்தம் காட்டாம நிக்கிறே ?”

'எனக்கு லாவமாவது, மண்ணுவது ? நீ என்னமோ அல்லாமே மண்ணுளுப்பிலே மனசொடிஞ்சி நிக்கிறீ யேன்னுதான் நானும் ஒக்கு மத்தாச் சும்மா நிக்கிறேன், பஞ்சவர்ணம் !"

'ஒனக்குச் சங்கதி தெரியாதா. கோவிந்தம்மா?

"எதைச் சொல்லுறே? எங்க முத்தையன் அண்ணுச் சிக்கு சிலட்டுர் சேர்வைகாரர் வகையருவிலே பொண்ணு தெகைஞ்சிருச்சாம். கைக்கு ஒசத்தியான எடமாம். மிதப் பான பசையாம் !...ம் !...”

பஞ்சவர்ணத்திற்கு'ஊம்’கொட்டக்கூடத் தெம்பில்லை தேள் கொட்டிற்ைபோன்று அ ல் ல ற் ப டி ல் ளு ஸ். எதையோ ஒன்றை-இழக்கக்கூடாத தொன்றை இழந்து விட்ட பரிதவிப்பு குருதிச் சேர்க்கையில் ஓடியது. கால் பெருவிரல் தரையில் முளைத்திருந்த பூண்டுச் செடிகளை நெருடிவிட்டது. புல் சிதர் ஒன்று அவளது விரல் பட்டு நெளிந்து மீண்டும் உயிர்பெற்றது.

"பார்த்தியாலே! வணங்கின புல்லு பொழைச்சிக்கிடு மிங்கிறது அச்சாப் போச்சுது?...' என்ருள் தோழி.

கோவிந்தம்மா எதையோ சொன்ள்ை.

பஞ்சவர்ணம் வேறு எதையோ எண் ண ம் பொருத்தினுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/137&oldid=612042" இலிருந்து மீள்விக்கப்பட்டது