பக்கம்:மருதாணி நகம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மருதாணி நகம்

மணியக்காரர் மனைவியின் மரணத்தைச் செப்பினுள்

சாயாக்கடைப்பெண்.

வத்தவளும் மனம் வெந்தாள்.

இருவரும் பிரிந்தார்கள். பூக்காரப் பண்டாரங்கள் வதியும் வட்டத்தைச் சுற்றி நடந்து விலகினபோது, நாகுடிச் சாமியாடியார் வீட்டின் முன்னே திமிலோகப்பட்டது. நெற்றிப் பொட்டில் கை மட்டத்தை அமைத்துப் பார்த்ததும்தான், அவளுக்குச் சாவதானமான மூச்சுக் காற்று வந்தது.

'கிரகம் ஆட்டம் நடந்துகொண்டிருந்தது. அதுதான் அப்படிக் கூட்டம். சந்தைக்கூட்டம் கணக்குத்தான் !

கன்னி கழியாப் பெண்ணுக்கு கள்ள விழியைப் போலவே கள்ள வழியும் புலப்படும் என்பார்கள்.

சுத்தம்தான் ! "ஆமா ; நம்ம நாகுடிச் சாமியாடி ஐயா கிட்டக்க இந்தத் தாக்கலைப் போட்டாக்க, ஒரு விடிசாமம் வரதா?... வரும் ... வரும் !

உருமம் நெருங்கியது. பஞ்சவர்ணம் நலியாமல் கொள்ளாமல் காத்திருந்து நாகுடிச் சாமியாடியைப் பார்த்தாள். விஷயத்தைப் பிட்டுப்பிட்டு வைத்தாள். -

"இப்ப கையிலே மடியிலே ரொக்க சக்கம் ஏதும் இல்லியே, தங்கச்சி?" என்று மென்று:விழுங்கினர் முதியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/138&oldid=612043" இலிருந்து மீள்விக்கப்பட்டது