பக்கம்:மருதாணி நகம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் Í 37

அவளுக்குக் கழுத்தைச் சுட்டாற்போலிருந்தது. கருகும ணி வளையத்தில் வளைந்த கை விரல் அவளுக்கு கோலப்பன் அளித்த தங்கத் தாலிச் சரட்டை நினைவூட்டி யது. தங்கத் தாலிச் சரடாச்சே அது ? அதையா அபச குனம் பிடிச்சதொப்ப அடமானம் வைக்கிறது? ஆமா, வைக்கத்தான் வேணும். இல்லாங்காட்டி, எம் மானமில்ல மானத்துக்குப் பறிஞ்சிடும்!... அப்பாலே, எங்க முக்குடிக் காரக பூட்டாங்கயிறு அறுந்த பூரணிக்காளை ஆகிப் புடாதா ? ...”

'அய்யா!...” “ என்னு தங்கச்சி ?” “ தடயம் விழுந்திருச்சு, இது கமுக்கமானது,” என்ருள். பிறகு, சேதியை சாமியாடியின் செவிகளில் போட்டார்.

அடுத்த ஒரு நாழிகைப் பொழுது கழிந்ததும், பஞ்ச வர்ணம் தங்கத் தாலிச்சரட்டுடன் வந்து,சாமியாடியிடம் நீட்டினுள்.

“சபாசு!...” என்று விரல் சொடுக்கினர்; நெட்டி பறித்தார். குடுமியை முடிந்து கொண்டு வெளியே புறப்பட்டார். திரும்புகையில், அந்தப் பெரியவர் ஏந்தி வந்த மங்குத் தட்டில், முத்தையன் அன்று பரிசளித்த அதே அச்சுக்கொண்ட சேலை, ரவிக்கை, நகை, நட்டு எல்லாம் இருந்தன.

எங்கிருந்தோ வந்த காளவாய் நாற்றம் நாசியில் ஏறியது!

பஞ்சவர்ணத்திற்குக் காண்பது கனவா, இல்லை, நனவா என்றே புலளுகவில்லை. புலனடங்காக் களிப்பு ஊறியது. கொழுந்தோடிப் படர்ந்த மருக்கொழுந்து ஆளுள் அவள் !

聚對

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/139&oldid=612044" இலிருந்து மீள்விக்கப்பட்டது