பக்கம்:மருதாணி நகம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 ஆம் : சுந்தரக் கணு

மணக்கும் மருக்கொழுந்து ஆளுள் பஞ்சவர்ணம். கொழுந்தின் பசுமையும் பவித்திரமும் ஒருருக் கொண்டு நாட்டுப்புற மோகினியாக உருக்கொண்டன. கிள்ளிய இடத்தில் எல்லாம் மருக்கொழுந்தின் வாடை தெரியும் அவள் நிலையும் அப்படித்தான் ஆயிற்று. விட்ட இடத் தைத் தொட்டு எண்ணமிட்ட நினைவெல்லாம் அவளுக்கு இனித்தது: இன்பம் ஈந்தது; கனவாகப் பரிமளித்தது.

அமைந்து விட்டால், வாழ்க்கையைப்போல சுகக் கனவு வேறு என்ன இருக்கிறது ?

அவளுக்குப் புதிது புதிதான நினைவுகள் சொக்கட் டான் ஆயின.

கையில் தவழ்ந்த பீங்கான் தட்டுச் சாமான்கள் சாமான்யமானவையா ? அவளது தன் மானத்தைமெய் யுடலின் மானப் பண்பைக் கட்டிக்காத்துவிட்ட அதிசயப் பொருள்களாயிற்றே !

கையெடுத்துக் கும் பி ட .ே வ ண் டு ம் போலத் தோன்றியது.

வணக்கத்திற்கு வாடிக்கை கோரி, மனக் கிழியில் யார் யாரோ தோன்ருமல் தோன்றினர்கள்.

'அவுக...ப்பூ...முத்தையனங்காட்டி?...பூ! சிரிப்பில் சினம் தடம் பதித்தது.

"அவுங்க...எங்க ஆசை மச்சான் காரக...!.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/140&oldid=612045" இலிருந்து மீள்விக்கப்பட்டது