பக்கம்:மருதாணி நகம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 139

கோலப்பனை வணங்கப் பிறந்தவளல்லவா ?

நாகுடிச் சாமியாடியின் பி ம் ப ம் தெரிந்ததுதான் தாமதம், அவளுள் களி, களிக் கூத்துப் போட்டது. “எம்பிட்டு சென்ம சென்மத்துக்கு இந்த ஐயாவை மறக்க ஏலாது எனக்கு, சாமியின்,ை அதுக்கின்னு வேசம் போட்டுக்கினு சாமி வரும் ?...அப்பிடி வாரதுக்கு ஆரம் பிச்சிட்டாக்க, அப்பாலே, மனுசங்களைப்போல, ஆண்டவ னும் வெறும் வேசதாரி ஆகிப்பிட மாட்டாளு?...மனுசங்க கிட்டே ஒசந்த கொணமும், ஒசத்தியான தன்மையும் வாய்ச்சிட்டாக்க, அதுக்குப் பொறகாலே, அந்த ஆளுங்க தேவருங்க கணக்குத்தானே ?... இப்பைக்கு, என்வரைக் கும் ஆபத்துக்கு உதவிசெஞ்ச இந்த ஐயாவை நெறைஞ்ச வயித்தோட சதா நினைச்சுக்கிட்டு இருப்பேனுக்கும் !... ஆமா. நன்னி உள்ள குட்டி நானு!...”

அழிந்த அந்தியை அழித்துக்கொண்டே, பஞ்சவர் ணத்தின் வளர்ந்த கனவு வளர்ந்துகொண்டே வழி நடந்தது!

'பள்ளச்செய்' வந்தது ஒதுங்கியது.

குதிகாலைப் பதம் பார்த்த நெருஞ்சி முள்ளைப் பிடுங் கிள்ை தலையைச் சுற்றி மடங்கிள்ை.

மழை முகம் கண்டது.

மஞ்சள் வெயிலில் தூற்றல் சதுர் ஆடிற்று. இயற்கையை வாழ்த்தி வளர்க்கும் அந்த மண்ணை வாழ்த்தியவளாக அவள் விழி மலர்த்தி, வழி விலக்கி நடை தொடர்ந்தபோது, அந்த மண் நெடியும் அவளுடன் கைலாகு கொடுத்துத் தொடர்ந்தது.

ஊர் எல்லை வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/141&oldid=612046" இலிருந்து மீள்விக்கப்பட்டது