பக்கம்:மருதாணி நகம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மருதாணி நகம்

ராக்காச்சி அம்மனை வணங்க நெடுஞ்சாண் கிடை யாக விழுந்தாள் எழுந்தாள். தனது அடிமனத்தின் அடிவாரத்திலே முத்தையனின் ஈவிரக்கமிழந்த பேய்க் குரல் பிசிறு வெட்டி எதிரொலிப்பதை உணர்ந்தாள் அவள்.

'இந்தாப்பாரு பஞ்சவர்ணம்! உன் பசப்புப் பேச்சுக் கெல்லாம் இனியும் இந்த முத்தையன் மசியமாட்டான். நாளைக்குப்பொழுது படுறதுக்குள்ள, எம்புட்டு பொருளுக முச்சூடும் எங் கைக்கு வந்து சேரவேணும். இல்லாங் காட்டி, எனக்கிண்ணு ஊருப்பஞ்சாயத்து கூட்டின ஒனக் கும் நாளைக்கு ஊர்ப் பஞ்சாயம் வைக்காம நானு பாயிலே தலைசாய மாட்ட்ேனுக்கும் !...”

கண் அடிபட்டு, பின்னர், கல்லடிபட்ட கட்டு விரியனைப் போல, அவள் நெஞ்சில் வெஞ்சினம் தாங்கி, விழி நோக்கில் வழி புரிந்த பாவனை தாங்கி, இதழ் நகைப்பில், தன் மானத்தைக் கட்டிக் காத்துக்கொண்ட

பூரிப்புப் பெருமிதம் தாங்கி, ஏறு நடை நடந்தாள்.

அவள் மனை அடைந்தாள். கை விளக்கைப் பொருதினுள். முகம் கழுவிக் கொண்டாள். சாந்துப் பொட்டு இட்டுக் கொண்டாள். கோடாலி முடிச்சு’ போட்டுக் கொண்டை முடித்து, மல்லிகைப் பூச்சரம் சூட்டிக்கொண்டாள். சுவரில் தெரிந்த கண்ணுடியில் அவளது கண்ணுடி வதனம் தெரிந்தது. முகம், கண், மூக்கு என்று அங்கம் பிரித்து, அங்கம் பார்த்து அழகு பார்த்தாள் பாவை. கழுத்தை நோக்கினுள், கண்கட்டு கழற்றப்பட்டதைப் போன்று கண் கலங்கிளுள். "மச்சான்' ஆசையா வாங்கித் தந்த அந்தத் தங்கத் தாலிச் சரட்டை அவுகளோட கைராசிக் கையினலே என் கழுத்திலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/142&oldid=612047" இலிருந்து மீள்விக்கப்பட்டது