பக்கம்:மருதாணி நகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. மருதாணி நகம்

கொட்டின. ம்...எம் பொசுப்பு அம்பிட்டுத்தான். நான் கொடுத்து வைக்காத கொடும்பாவி ஆயிப்புட்டேன்!.

எட்டடிக் குச்சு வீடு அது. இயற்கைத்தாய் சீர் தந்த அமைதிப் பொலிவு அங்கே பூத்திருந்தது. அமைதிக்கு அன்பு மட்டுந்தான் பண்பல்ல; ஆணவமும் கூட அதன் குணங்களில் ஒன்றுதான். குடிசையைச் சூழ்ந்திருந்த தோட்டத்தில் அப்படிப்பட்ட 'ஆணவம்' தலை நிமிர் ந் த து. சோளக்கதிர்க் கொண்டைகள் கெண்டை மீன்களைப்போலத் துள்ளி விளையாடிக்கொண் டிருந்தன. நாலு சால் தண்ணிரை உண்ட கத்தரிச் செடிகளில் பிஞ்சுகள் தோன்றியிருந்தன. இதழ் விலக் கிப் பார்த்து, இதழ் விலக்கிச் சிரித்தவண்ணம், வண்ணம் பரப்பியிருந்த செடி கொடிகளைக் கடந்து குடிசையை அடைந்தாள் மூங்கில் தட்டியில் காய்ந்த சேலையைத் தட்டி உதறிஞள் ரவிக்கைத் துணியை எடுத்தாள்.

மறைவிலே நாணம் மறைந்தது! அழகிலே அழகு பிறந்தது!

ஒரு பாகத்திற்குப் பிசிறு மடங்காமல், பர்மாக்காரி யின் முடியைப் போலச் செழித்து வ ள ர் ந் தி ரு ந் த கேசத்தை ஆத்தியெடுத்து கொண்டை போட்டாள். செவ்வந்திப் பூவைச் செருகினுள். சிந்துாரப் பொட்டு இட்டாள். ஜிகின துாள் பளபளத்தது. சந்தைப் ($ க் கண்ணுடியில் அவள் உருவம் சமைந்தது. சமைந்த பெண்களுக் கென்று சிரித்தாள். சிரிக்கமாட் டர்ள் பின்னே? வெட்கம் கவ்வியது. 'கைகள் வதனத் தைக் கவ்வின திரைவிரித்த நாணத்திற்குத் திரை செலுத்தி, பின் திரை நீக்கியது.மென்காற்று. விரிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/16&oldid=611921" இலிருந்து மீள்விக்கப்பட்டது